சீன அதிபர் சொன்னது போல நடந்தது.. ஒரே நாளில் 25 பேர் பலி.. 5300 பேருக்கு பாதிப்பு.. வேகமெடுத்த கொரோனா
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 25 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு தற்போது 131 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

என்ன சொன்னார்
இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துவிட்டார். இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.இதற்கு மருந்து கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. இதன் வேகம் நாங்கள் நினைத்தை விட அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தாக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

மரணம்
இந்த நிலையில் சீன அதிபர் சொன்னது போலவே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 131 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதில் 8 பேர் குழந்தைகள். 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் திடீர் என்று வேகம் எடுத்துள்ளது. இதை யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை.

எவ்வளவு பாதிப்பு
அதேபோல் மொத்தமாக நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் திடீர் என்று அதிகரித்துள்ளது. சீனா முழுக்க நேற்று முதல்நாள் வரை மொத்தம் 2300 பேருக்குத்தான் நோய் தாக்கியது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் மளமளவென்று உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் புதிதாக 3000 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 5300 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை
சீனாவில் இந்த நோய் தாக்குதலுக்காக புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி மாலை இது திறக்கப்பட உள்ளது. இங்கு 1000 பேர் சிகிச்சை பெற முடியும். ஆனால், தற்போது இந்த மருத்துவமனையிலும் கூட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5300 ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications