எனக்கு 35 உனக்கு 20 வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண் - வித்தியாச காதல் கதை

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது இயற்கையான நிகழ்வு. 15 ஆண்டுகாலம் வளர்த்த மகனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஒரு பெண். இங்கல்ல ரஷ்யாவில்தான் இந்த கூத்து நடந்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

ரஷ்யா: ஆண் பெண் ஆகிய இருமணம் இணைவது திருமணம். இயற்கையான நியதிக்கு ஏற்ப நடைபெறும் எத்தனையோ திருமணங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கணவனின் முதல் தாரத்து பிள்ளையை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண். அந்த பெண்ணிற்கு 35 வயதாகிறது. அந்த பெண்ணின் வளர்ப்பு மகனுக்கு தற்போது 20 வயதாகிறது. இவர்களின் திருமணம் பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார். அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த புரட்சிகரமான திருமணத்தை செய்த பெண்ணின் பெயர் மெரீனா பல்மஷோவா. இந்த பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு போட்டோவை போட்டார். அதில் குண்டாக இருக்கும் மெரீனா ஒரு சிறுவனின் கையை பிடித்திருப்பது போல இருக்கும் படத்தை பதிவிட்டிருந்தார். கூடவே 20 வயது இளைஞனை கட்டி அணைத்திருப்பது போல புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதற்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை அந்த பெண்மணி. அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

 திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

இந்த திருமணத்தைப் பற்றியும் தனது காதல் கதையைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறார். அதில் தனக்கு 22 வயதாக இருந்தபோது அலெக்சி என்பவரை கல்யாணம் செய்தேன். அப்போதே அலெக்சிக்கு 5 மகன்கள் இருந்தனர். அதில் இரண்டாவது மகன்தான் விளாடிமிர் ஷவரின். அப்போது அவனுக்கு 7 வயது. பத்து வருடங்கள் அலெக்ஷியுடன் வாழ்ந்த பின்னர் விவாகரத்து பெற்று விட்டேன். ஆனால் அலெக்ஷியின் மகன்கள் மூன்று பேருடன் தனியாக வசித்து வந்தேன்.

வளர்ப்பு மகனுடன் காதல்

வளர்ப்பு மகனுடன் காதல்

திடீரென ஒருநாள் ஷவரினுக்கு மெரீனா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. மெரீனா வளர்ப்பு தாய் என்பதை மறந்து விட்டார் ஷவரின். அதே போல தனது வளர்ப்பு மகன் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது என்பதை மெரீனாவும் மறந்து விட்டார். இருவருமே காதலில் திளைத்திருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன் கர்ப்பம்

திருமணத்திற்கு முன் கர்ப்பம்

விளைவு கர்ப்பமானார் மெரீனா. குழந்தை பிறக்கும் முன்பாக இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கடந்த வாரம் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். திருமண உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

    Russia comments on India's MIG 29 vs China
    பேசாத முன்னாள் கணவன்

    பேசாத முன்னாள் கணவன்

    திருமணம் பற்றி கூறும் மெரீனாவோ, பாரம்பரிய உடை அணிந்து திருமணம் செய்து கொண்டோம் உள்ளூர் ரெஸ்டாரெண்டில் சின்னதாக ரிசப்சன் வைத்தோம் சொந்தக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனது முன்னாள் கணவரும், மணமகனின் அப்பாவுமான அலெக்ஷிதான் பேசவே இல்லை. இந்த திருமணம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ என்று கூறியுள்ளார். ரஷ்யா போன்ற ஊர்களில் இதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. நம்ம ஊர் கலாச்சாரத்தில் இன்னும் இது போன்ற திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+