38 வயதில் 20 வயது பெண்ணை ரகசியமாய் மணந்த சோயிப் அக்தர்
கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளரான 38வயதான சோயிப் அக்தர், 20 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் சோயிப் அக்தர். மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில், 1999ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர், நிக்நைட்டுக்கு எதிராக இவர் வீசிய பந்து வீச்சு இதுவரை தகர்க்க முடியாத அதிவேக பந்து வீச்சு சாதனையாக இருந்து வருகிறது. கிரிக்கெட்டில் இருந்து குறுகிய காலத்திலேயே ஓய்வுபெற்ற இவர், இப்போது மோசமான ஒரு சாதனையையும் செய்துள்ளார்.

அக்தருக்கு தற்போது 38வயதாகிறது. அவர் 20 வயதான ரூபப் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்பெண்ணை அக்தர் மணமுடிக்க உள்ளதாக கடந்த மாதமே ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தபோதிலும், இதை அவர் மறுத்துவந்தார். இந்நிலையில், கராச்சியின் அருகேயுள்ள ஹரிபூர் என்ற பகுதியில் நேற்று, அக்தர் திருமணம் நடந்தேறியது.
மிக எளிமையான முறையில் ஒரு சில உறவினர்களை மட்டுமே அழைத்து, இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இம்மாதம் 12ம்தேதி அக்தர் தனது பெற்றோருடன், ரூபப் வீட்டுக்கு சென்று திருமண ஏற்பாடுகளை பேசி முடித்ததாக பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. ரூபப்புக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர், இவரின் தந்தை ஒரு தொழிலதிபராகும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications