லிபியாவில் ராணுவம்-போராளிகள் நடுவேயான சண்டையில் 47 பேர் சாவு
கெய்ரோ: லிபிய ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடுவேயான சண்டையில் சுமார் 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவின் திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்ற, போராளிகள் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். துப்பாக்கி சூடும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஒரு விமானம் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தையடுத்து நேற்றுமுன்தினம் மீண்டும் சண்டை ஆரம்பித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் இறந்துள்ளதாகவும், 120 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் மோசமான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. போராளிக் குழுக்களை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.