ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் மோடி. 'ஹௌடி மோடி' (மோடி நலமா) நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றுகிறார்கள்
பிரதமர் மோடியின் உரை நிறைவு பெற்றதை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Sep 23, 2019, 12:18 am IST
அதிபர் டிரம்ப் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
எங்கள் நட்பு நம் கனவுகளையும், எதிர்காலத்தையும் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்: மோடி.
Sep 23, 2019, 12:12 am IST
தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிரான ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது: மோடி
Sep 23, 2019, 12:12 am IST
அமெரிக்காவில் 9/11 அல்லது மும்பையில் 26/11 ஆக இருந்தாலும், சதிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பிரதமர் மோடி
Sep 23, 2019, 12:10 am IST
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்காகவே பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
தீவிரவாதிகளும். பிரிவினைவாதிகளும் அதை தவறாக பயன்படுத்தினார்கள்.
இப்போது அங்குள்ள மக்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது: மோடி.
#WATCH PM Narendra Modi: Article 370 had deprived people of Jammu and Kashmir and Ladakh of development. Terrorist and separatist elements were misusing the situation. Now after abrogation, people there have got equal rights. pic.twitter.com/mNa2d7kJkK
எங்களைப் பொறுத்தவரை, 'வணிகத்தை எளிதாக்குவது' போலவே 'வாழ்க்கையை எளிமையாக்குது முக்கியம்.
ஆனால் அதற்கு சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது முக்கியம்: பிரதமர் மோடி.
Sep 23, 2019, 12:07 am IST
சாதாரண மக்கள் அதிகாரம் பெறும்போது தான் சமுகம் மற்றும் பொருளாதார வளர்சசியின் பாதையில் தேசம் முன்னேறுகிறது: பிரதமர் மோடி
Sep 22, 2019, 11:52 pm IST
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 'எல்லோரும் நலம்' என்ற வாக்கியத்தை மோடி பேசினார்
எதையும் மாற்ற முடியாது என்ற மனநிலை உடையவர்களூக்கு இந்தியா சவாலாக உள்ளது: மோடி
Sep 22, 2019, 11:46 pm IST
இப்போது நாம் உயர்ந்த இலக்கை அடைவதுடன் புதிய உயரத்தையும் அடைகிறோம். : மோடி
Sep 22, 2019, 11:42 pm IST
நமது ஜனநாயகத்தின் துடிப்பான அடையாளமே பன்முகத்தன்மை தான்: பிரதமர் மோடி
Sep 22, 2019, 11:42 pm IST
பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தில் மொழிகள் வளர்ந்து வருகின்றன; மோடி
Sep 22, 2019, 11:42 pm IST
நமது பல்வேறு மொழிகள் தான் நம் இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்: மோடி
Sep 22, 2019, 11:38 pm IST
ஹவுடி மோடி என்று இந்த நிகழ்ச்சியை அழைக்கிறார்கள்.
ஆனால் நான் 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் சாதாரண மனிதன் தான்: மோடி.
Sep 22, 2019, 11:38 pm IST
இங்குள்ள சூழ்நிலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனிச்சிறப்படையதாக இருக்கிறது.
டெக்ஸாஸை பற்றி பேசும் போதெல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது.
ஒரு வரலாறு உருவாக்கப்படுவதை நான் காண்கிறேன்.
அத்துடன் ஒரு புதிய கெமஸ்டரி உருவாதையும் பார்க்கிறேன்: பிரதமர் மோடி.
Sep 22, 2019, 11:27 pm IST
பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றி வருகிறார்
Sep 22, 2019, 11:16 pm IST
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.
இரண்டு நாடுகளும் இந்த கருத்தில் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளது.
2 நாடுகளும் தங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும் - டிரம்ப்
Sep 22, 2019, 11:15 pm IST
எரிசக்தி துறையில் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகில் பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக அமெரிக்கா மாறியுள்ளது - டிரம்ப்
Sep 22, 2019, 11:15 pm IST
இந்தியா உடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம் - டிரம்ப்
Sep 22, 2019, 11:09 pm IST
மருத்துவ துறையில் இந்திய அமெரிக்கர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.
புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கி வருகிறார்.
பிரதமர் மோடியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - டிரம்ப்.
Sep 22, 2019, 11:09 pm IST
இந்திய அமெரிக்க மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள் - டிரம்ப்
Sep 22, 2019, 11:08 pm IST
தனது அரசியல் சாதனைகளை அதிபர் டிரம்ப் பட்டியலிட்டு வருகிறார்
Sep 22, 2019, 11:08 pm IST
டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பின்மை மொத்தமாக குறைந்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை 33% ஆக டெக்ஸாஸ் மாகாணத்தில் குறைந்துள்ளது - டிரம்ப்.
Sep 22, 2019, 11:08 pm IST
என்னுடைய ஆட்சியின் கீழ் ஹவுஸ்டன் வேகமாக வளர்ந்து வருகிறது - டிரம்ப்
Sep 22, 2019, 11:06 pm IST
300 மில்லியன் மக்களை மோடி வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்.
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது - டிரம்ப்.
Sep 22, 2019, 11:05 pm IST
இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு இருக்கிறது.
இரண்டு நாடுகளும் மிகப்பெரிய வரலாற்று ஒற்றுமையை கொண்டது - டிரம்ப்.
Sep 22, 2019, 11:04 pm IST
நம்முடைய எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கிறது.
இரண்டு நாடுகளும் ஒரே மாதிரி வளர்ந்து வருகிறது - டிரம்ப்
Sep 22, 2019, 11:03 pm IST
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளது.
டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார் - டிரம்ப்
Sep 22, 2019, 11:03 pm IST
இங்கு கூடி இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி - டிரம்ப்
READ MORE
9:33 PM, 22 Sep
50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் உரையை கேட்கவும், அவரை பார்க்கவும் திரண்டு உள்ளார்கள் இதனால் அந்த இடமே உற்சாத்தில் கரைபுரண்டு ஓடுகிறது
9:33 PM, 22 Sep
இந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்கும் விதமாக குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா' நடனத்தை சுமார் ஆயிரம் கலைஞர்கள் ஆட உள்ளார்கள். இதேபோல் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடத்தும் 90 நிமிட கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது..
9:34 PM, 22 Sep
டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் அமைப்பான டெக்சாஸ் இண்டியா போரம் ஹௌடி மோடி' நிகழ்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குத் தொடங்கி உள்ளது. இரவு 11.30 வரை நடைபெறுகிறது.
9:34 PM, 22 Sep
இரவு 8.50 மணி: டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்து வரும் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்க்ரா கலைஞர்கள் உற்சாக நடனம் ஆடினர்.
இரவு 9.35 மணி: பிரதமர் மோடி ஹௌடி மோடி நிகழ்ச்சி நடந்து வரும் என்ஆர்ஜி ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார்
9:41 PM, 22 Sep
அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில் இது நிச்சயமாக ஒரு சிறந்த நாள் ஆக இருக்கும். மிக விரைவில் உங்களை சந்திக்க தயாராக உள்ளேன் என பதிவிட்டு இருந்தார்.
9:47 PM, 22 Sep
டெக்ஸாஸ் மாகாணத்திற்கான செனட்டர் ஜான் கார்னின் கூறுகையில், "அதிபர் டிரம்ப் மற்றும் பிரமர் மோடி ஆகியோர் என்ன வகையான விவாதங்களை நடத்தப்போகிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. இன்று அதிபர் டிரம்பிடம் இருந்து சில முக்கிய அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்த வேறுபாடுகளை நாங்கள் தீர்த்து வைக்க முடியும் என நம்புகிறேன்" என்றார்
#WATCH US Senator for Texas, John Cornyn: I don't know specifically about what sort of discussions the President & PM are going to have. I won't be surprised if there is some announcement by President Trump today, hopefully we'll be able to sort out trade differences. #HowdyModipic.twitter.com/a9aEOidzgP
அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் ஹூஸ்டனில் பிரதமர் மோடியை வரவேற்கும் போது பேசுகையில், "இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தகம் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து கொண்டே இருக்கிறது. இந்திய கலாச்சாரம் எங்கள் மாநிலத்தின் ஆடைகளால் பிணைக்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடியுடனான இந்த கலாச்சார உறவைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்
9:52 PM, 22 Sep
என்.ஆர்.ஜி மைதானத்திற்கு பிரதமர் மோடி வந்துவிட்ட நிலையில் விரைவில் பேச உள்ளார். பிரதமரின் பேச்சைக் கேட்க கிட்டத்தட்ட 50,000 இந்திய-அமெரிக்கர்கள் ஆர்வமுடன் உள்ளார்கள்,
9:56 PM, 22 Sep
பிரதமர் மோடியை என்.ஆர்.ஜி மைதானத்தில் அமெரிக்க அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
9:58 PM, 22 Sep
பிரதமர் மோடி மைதானத்திற்கு வந்த போது பலத்த கரஒலியும் உற்சாக குரல் எழுப்பியும் மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ காட்சியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அன்பான வரவேற்பு அளித்த ஹுஸ்டனுக்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. இது போன்ற அற்புதமான பாசத்தை காட்டிய ஹூஸ்டனுக்கு நன்றி என பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
10:10 PM, 22 Sep
யு.எஸ். நாடாளுமன்ற மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் பிரதமர் மோடியை ஹூஸ்டனுக்கு வந்த வரவேற்கிறார். அப்போது பேசுகையில் "அமெரிக்காவில் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்" என அமெரிக்காவிற்கு அமெரிக்கவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பாராட்டி ஸ்டெனி பேசினார் .
10:24 PM, 22 Sep
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்று உரையாற்றிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர். மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசியதுடன் , இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவை வளர்த்து கொள்வது தான் இந்தியர்களுக்கும் அமரிக்கர்களுக்கும் ஒரே நோக்கம் என்றார்.
10:25 PM, 22 Sep
மனித உரிமைகள் அடிப்படை அவசியம் என்றும், யாருக்கும் எந்த தீங்கும் நடக்கக்கூடாது, ஒரு நபரின் கண்களில் வரும் கண்ணீர் ஓய்வும வரை வேலை முடிந்துவிடாது என்று ஜவஹர்லால் நேரு பேசியதை அமெரிக்க எம்பி ஸ்டெனி மேற்கோள் காட்டினார். இதேபோல் ஜனநாயகம் என்பது பலவீனமானவர்களுக்கு பலமான அதே வாய்ப்பைக் கொடுக்கும் ஒன்று" என்று அவர் காந்தி சொன்னதையும் மேற்கோள் காட்டி பேசினார்.
10:40 PM, 22 Sep
நேருவின் பார்வையின் படி, இந்தியா ஒரு மதசார்ப்பற்ற ஜனநாயக நாடு. இந்தியாவில் மதசார்பற்ற ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் ஒவ்வொரு தனிநபரை மனித உரிமைகள் மூலம் பாதுகாப்பது தான்: ஸ்டெனி
10:40 PM, 22 Sep
மகாத்மா காந்தியின் வழிகாட்டுதல்களின் படி அமெரிக்கா தனது எதிர்காலத்தை பாதுக்க அதன் மரபுகள் பற்றி பெருமிதம் கொள்கிறது என ஸ்டெனி தெரிவித்தார்.
10:42 PM, 22 Sep
ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உற்சாக வரவேற்பு
10:46 PM, 22 Sep
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
10:50 PM, 22 Sep
ரமேஷ் மோடி என்பவர் மகாத்மா காந்தி போன்ற வேடத்தில் நிகழ்ச்சிக்கு வருகை தந்து பார்வையாளர்களை கவர்ந்தார்
Ramesh Modi, a man dressed up like Mahatma Gandhi at #HowdyModi event says,''Modi aur Gandhi ek hi hain, these are saints, fakirs. Gandhi was a fakir, same nature exactly. Welcome Modi to the town here.'' pic.twitter.com/hxNLH6O8TB
ஹவுடி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்
10:53 PM, 22 Sep
டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பே பிரபலமாக இருந்தார். அவர் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பிரபலமாகி இருந்தார்
10:56 PM, 22 Sep
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுவாகி உள்ளது. ஹவுஸ்டன் தொடங்கி ஹைதராபாத் வரை, பெங்களூர் வரை, நியூஜெர்சி முதல் நியூ டெல்லி வரை எல்லோரும் டிவி முன் இருக்கிறார்கள்
10:57 PM, 22 Sep
இங்கே இருக்கும் என் குடும்பத்திற்கு அதிபர் டிரம்ப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
10:59 PM, 22 Sep
உலகம் முழுக்க இருக்கும் இந்திய மக்களின் குடும்பங்களுக்கு என் நண்பர், இந்தியாவின் நண்பர் டிரம்பை அறிமுகம் செய்கிறேன்
11:01 PM, 22 Sep
ஹவுடி மோடி விழாவில் அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்
11:03 PM, 22 Sep
ஹவுடி மோடி விழாவை ஒருங்கிணைத்தவர்களுக்கு மிக்க நன்றி - டிரம்ப்
11:03 PM, 22 Sep
ஹவுஸ்டன் எப்போதும் மிகவும் வலிமையான நகரமாக இருந்துள்ளது
இங்கிருக்கும் மக்கள் எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் - டிரம்ப்
11:03 PM, 22 Sep
இங்கு கூடி இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி - டிரம்ப்
11:03 PM, 22 Sep
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளது.
டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார் - டிரம்ப்