For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரியாவில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு.. 50 பேர் பலி.. பலர் காயம்

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் தேவாலயத்தில் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

50 were died in Church attack by gun men in Nigeria

ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கியுடன் வந்தவர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

50 were died in Church attack by gun men in Nigeria

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலை என்றும் ஓண்டோ மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தை அவர் பார்வையிட்டார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முகமது புஹாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது கொடூரமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
50 were died in Church attack by gun men in Nigeria. Many were injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X