For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.5 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அச்சம் ஏற்பட்டது.

By Madhivanan
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கமாது 20 வினாடிகள் நீடித்தது.

indonesia

இந்நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

இதனிடையே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது.. இதனால் மக்களிடையே சுனாமி அச்சமும் எழுந்தது.

உலகையே உறைய வைத்த 2004-ம் ஆண்டு சுனாமி கொடூரமும் இதே டிசம்பர் மாதமும் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
A strong earthquake shook Indonesia's most populous island of Java on Saturday early hours, collapsing buildings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X