முட்டை திருடிய அரசு ஊழியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை... கியூபாவில்!
கியூபா: கியூபாவில் அரசு முட்டை நிறுவனத்தில் ரூ. 2 கோடி மோசடி செய்த 18 ஊழியர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் முட்டைகளைத் திருடி ஊழியர்களே கள்ள சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதுவரை அவர்கள் சுமார் 80 லட்சம் முட்டைகளை இவ்வாறு கள்ள சந்தையில் விற்றதாகக் கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.
இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications