Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மாடியோவ்.. 61வது வயதில் 88வது திருமணம்.. அசத்தும் "ப்ளேபாய் கிங்".. கடைசி கல்யாணத்தில் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 61 வயது முதியவர் ஒருவர் தனது 88வது திருமணத்தை விரைவில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் திருமணம் செய்த 86வது மனைவி தன்னை நேசிப்பதாக கூறிய நிலையில் மீண்டும் அவரையே கரம் பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவருக்கு இந்தோனேஷியாவின் ப்ளே பாய் என்கிற பட்ட பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த முதியவர் தனது 14வது வயதில் அவரைவிட 2 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து தனது இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

 முதல் திருமணம்

முதல் திருமணம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், காலத்திற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்வதுண்டு. ஆனால் காலாகாலத்திற்கும் திருமணம் செய்துகொண்டே இரு என்று இந்த முதியவரிடம் யாரோ சொல்லியுள்ளார்கள் போல. அதனால்தான் தனது 61 வயதில் 87 திருமணங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். விரைவில் 88வது திருமணமும் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இவர்தான் இந்தோனேசியாவின் 'ப்ளே பாய் கிங்'. இந்த பெயரை உள்ளூர் மக்களே இவருக்கு சூட்டியுள்ளனர். இவர் பெயர் கான். இவர் ஒரு விவசாயியாவார்.

2வது திருமணம்

2வது திருமணம்

இவரது திருமண வாழ்க்கை 14 வயதில் தொடங்கியுள்ளது. அப்போது இவரை விட 2 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இவர் அப்பெண்ணிடம் முரடனாக நடந்து கொண்டிருக்கிறார். பின்னர் 2 ஆண்டுகளுக்கெல்லாம் இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. மனைவி விவாகரத்து கேட்டிருக்கிறார். இவரும் விவாகரத்து கொடுத்த கையோடு வேறு ஒரு திருமணத்தையும் நடத்தி இருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கெல்லாம் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது. பின்னர் மற்றொரு திருமணம் நடத்தியிருக்கிறார். ஆனால் இந்த முறை பெண் தேட மிகவும் அலைந்து திரிந்துள்ளார்.

 வசியம்

வசியம்

இதனையடுத்து பெண்களை வசியம் செய்ய ஆன்மீகத்தை நாடியுள்ளார். அப்புறம் என்ன? அவரது வாழ்க்கையில் கெட்டி மேளம் சத்தம்தான். அட ஆமாங்க இதுவரை இவர் 87 திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து 87 விவாகரத்துகளையும் நடத்தியுள்ளார். சரி இப்போது அவர் சிங்கிள்தானே? என்று நீங்கள் கேள்வியெழுப்பலாம். இங்கேதான் அந்த வசிய மந்திரம் வேலை செய்துள்ளது. அதாவது இவரது 86வது மனைவி இவர் மீது மீண்டும் காதல் கொள்ள தொடங்கியுள்ளார். எனவே அவரையே மீண்டும் திருமணம் செய்து கொள்ள விவசாயி கான் முடிவெடுத்துள்ளார்.

ஒப்புதல்

ஒப்புதல்

"இவரின் இந்த ஸ்பீடு 2K கிட்ஸ்ஸையே தூக்கி சாப்பிட்டிடும் போல" என பலரும் சமூக வலைத்தளங்களில் இவரின் ஸ்டோரியை பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர். மறுபுறம், திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் மூலை முடுக்கெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் 90'ஸ் கிட்ஸ் இந்த கதையை படித்து கண்டும் காணாமல் நகர்ந்து வருகின்றனர். எப்படியாயினும் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றையொன்று புரிந்து ஒப்புதலுடன் நடந்தால் சரிதான் என திருமணமான பெரியோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+