நாங்க இருக்கோம்.. திடீரென்று தோன்றிய 4 தேவதைகள்.. 70 வயது முதியவர் வாழ்வில் நடந்த அதிசய சம்பவம்!
கேம்ப்ரிட்ஜ் : இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பகுதியில் 70 வயது முதியவரின் வாழ்வில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது.
Recommended Video
ஃபிரெட் எனும் அந்த முதியவர் உயிருக்கு போராடிய போது, ஹோட்டலில் டின்னர் முடித்து வெளியே வந்த, தேவதைகள் போன்ற நான்கு நர்ஸ்கள், சரியான நேரத்தில் அவர் உயிரை காப்பாற்றி உள்ளனர்.
இது அதிசய சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஏன் அந்த நான்கு தேர்ச்சி பெற்ற நர்ஸ்கள் அந்த நேரத்தில் அங்கே வர வேண்டும்.. என்பதை நம்ப முடியாமல் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறார் ஃபிரெட்.

19 ஆண்டுகளுக்கு முன்..
டோன்னா ஸ்கில்ட்டன், ஜூலியா இயர்ல், ஜோ மோர், ஃப்ளிஸ் ஃபுல்லர் ஆகிய நான்கு பேரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரிட்ஜ்-இல் இருக்கும் அடேப்ரூக்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினர். பல ஆண்டுகளுக்கு பின் அனைவரும் வேறு, வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாக மாறி விட்டனர்.

டின்னர் சாப்பிட சென்றனர்
எனினும், தொடர்ந்து தொடர்பில் இருந்த நால்வரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், நால்வரும் டின்னர் சாப்பிட செல்லலாம் என முடிவு செய்தனர். கேம்ப்ரிட்ஜ் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பின் அவர்கள் தங்கள் கார் நின்று இருந்த பகுதிக்கு வந்தனர்.

முதியவர் ஃபிரெட் வந்தார்
சரியாக அந்த நேரத்தில் 70 வயது முதியவர் ஃபிரெட் தன் மனைவி மற்றும் நண்பருடன் உணவு உண்ண வந்துள்ளார். காரை நிறுத்தி விட்டு அவர் நடந்து வந்த போது இதயம் நின்றுள்ளது. அவர் மூச்சு விட முடியாமல் கீழே விழுந்தார்.

தேர்ச்சி பெற்ற நர்ஸ்கள்
அந்த நேரத்தில் தேவதைகளாக அங்கே வந்த இந்த நான்கு நர்ஸ்களும் அவருக்கு உதவினர். அவர்கள் நால்வருமே அவசர சிகிச்சைப் பிரிவில் நல்ல தேர்ச்சி உடையவர்கள் என்பதோடு, அவர்களில் இருவர் தற்போது இதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கும் பிரிவில் தான் பணியாற்றி வருகின்றனர்.

முதல் உதவி
அதனால், ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு விடுத்தது விட்டு இடையே அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்த உடன் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய, ஃபிரெட் நினைவுக்கு திரும்பினார். இந்த அதிசய சம்பவத்தை ஃபிரெட்டால் நம்ப முடியவில்லை.

நம்ப முடியாத அதிசயம்
எப்படி தற்செயலாக அவசர சிகிச்சைப் பிரிவில் தேர்ச்சி பெற்ற நான்கு நர்ஸ்கள் ஒரே நேரத்தில் அங்கே வர முடியும்? இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் ஏன் அன்று சந்திக்க வேண்டும்? இதை நினைத்து அந்த நால்வரையும் தேவதைகளாக எண்ணி நன்றி கூறி உள்ளார் ஃபிரெட். வேலை நேரத்தில் இல்லாவிட்டாலும், ஒரு முதியவருக்கு உதவ முடிந்ததை எண்ணி அந்த நான்கு நர்ஸ்களும் ஆத்ம திருப்தி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications