For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிழிஞ்ச செருப்புடன் சீன அதிபரைச் சந்திக்க வந்த இலங்கை அமைச்சரைப் பாருங்க மக்களே!

Google Oneindia Tamil News

கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும் அந்த நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பிய்ந்த ஷூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்ததையும், உட்கார்ந்ததையும் வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வந்த இடத்தில் அவரது ஷூவின் கீழ்ப்பகுதி பிய்ந்து போய் விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை குலுக்கினார், ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

அந்த அமைச்சரின் பெயர் டி.பி.ஏகநாயகே. இவர் இலங்கை அரசில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.

சீனப் பிரதமர்...

சீனப் பிரதமர்...

இலங்கைக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்றிருந்தார். அப்போது இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

2 ஒப்பந்தங்கள்...

2 ஒப்பந்தங்கள்...

கையெழுத்தான ஒப்பந்தங்களில் ஒன்று - இரு நாட்டு பத்திரிகை, பிரசுரம், ரேடியோ, திரைப்படம் மற்றும் டிவி ஆகியவற்றில் இரு நாடுகளிடையிலான கூட்டுறவு தொடர்பானதாகும்.

அன்னநடை...

அன்னநடை...

இந்த ஒப்பந்தத்தில் சீன அமைச்சரும், ஏகநாயகேவும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் எழுந்து வந்தபோது மிக மிக மெதுவாக, காலை ஒரு மாதிரி இழுத்து வைத்தபடி நடந்து வந்தார். இது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பிய்ந்து போன ஷூ...

பிய்ந்து போன ஷூ...

ஆனால் அவர் அப்படி அன்ன நடை போட்டு வந்ததற்குக் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. அதாவது பிய்ந்து போன ஷூவுடன் அவர் வந்திருந்தார். இதனால் சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷூ இல்ல... ஷூ மாதிரி

ஷூ இல்ல... ஷூ மாதிரி

ஷூவின் கீழ்ப்பகுதி மட்டும் பிய்ந்து போயுள்ளது. இதனால் ஷூ போட்டது போலவே இருக்கிறது. ஆனால் ஷூவுக்குக் கீழே கால் நன்றாக தெரிகிறது. அவர் வேட்டி கட்டி வந்திருந்தாதல் ஓரளவு மறைக்க முடிந்தது. ஆனால் முழுமையாக மறைக்க முடியாமல் போய் விட்டது.

பேஸ்புக்கில்...

பேஸ்புக்கில்...

அமைச்சரின் இந்த கோலத்தை இலங்கையில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்து அதை தங்களது பேஸ்புக்கில் போட்டு விட்டனர்.

தர்மசங்கடத்தில் அமைச்சர்...

தர்மசங்கடத்தில் அமைச்சர்...

இப்போது அமைச்சர் ஏகநாயகேவின் மானம் கப்பலேறி உலகம் பூராவும் பரவி விட்டது. இலங்கை அரசுக்கும் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.

படங்கள்: Foreign Correspondents' Association of Sri Lanka

English summary
Sri Lanka’s Cultural Minister T. B. Ekanayake lost his sole during a ceremony attended by visiting Chinese President Xi Jinping and President Mahinda Rajapakse Sept 16, 2014 at the Presidential Secretariat in Colombo. Minister Ekanayake had to tip-toe when called to sign an agreement on “Cooperation between the State Administration of Press, Publication, Radio, Film and Television of China and the Ministry of Culture and the Arts of Sri Lanka.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X