For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவிளக்கேற்றி, நிறை நாழி வைத்து பாரம்பரிய இந்து முறைப்படி மணந்த 'கே' சந்தீப், கார்த்திக்

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தீப். கடந்த 2012ம் ஆண்டு அவருக்கு டேட்டிங் இணையதளம் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிராமணரான கார்த்திக் அறிமுகமானார். எஸ்.எம்.எஸ்., இமெயில்கள் மூலம் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியது. காதலை வளர்த்துக் கொண்ட அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டனர்.

A Malayali gay couple's beautiful wedding in California

அமெரிக்கா சென்ற பிறகு சந்தீப் மற்றும் கார்த்திக் தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்தனர். சிலர் ஏற்றுக் கொண்டனர், சிலர் எதிர்த்தனர். இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த மாதம் சந்தீப் மற்றும் கார்த்திக் நிலவிளக்கேற்றி வைத்து, நிறை நாழி வைத்து பாரம்பரிய இந்து முறைப்படி கலிபோர்னியாவில் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் அவர்களின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களான அவர்கள் தடைகளை தகர்த்தெறிந்து பிறருக்கு உதவும் புதிய பாணியை உருவாக்க நினைத்தனர் என்று அவர்களின் நண்பர் தெரிவித்துள்ளார்,

English summary
A Malayalai gay couple got married in Calfornia with the consent of their families.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X