அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேற்று இரவு நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் அங்கு ஒரு மினி கேரளாவே காலியாகிவிட்டதாக கூறுகிறார்கள் இந்ததிய உளவுத்துறையினர்.

கடந்த வருடம், பெண்கள் உட்பட 21 மலையாளி முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த தகவல் இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. முதலில் காணாமல் போய்விட்டதாகத்தான் அவர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால் பின்னர்தான் அவர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.

சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளாக மாறிய அவர்கள், அதன்பிறகு ஆப்கானிஸ்தானின் நன்கார்ஹர் நகரில் தங்க வைக்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டனர்.

ஆப்கனுக்கு சென்றனர்

ஆப்கனுக்கு சென்றனர்

இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது.

21 மலையாளிகளும் சாவு

21 மலையாளிகளும் சாவு

நேற்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

எதிர்பார்த்தது

எதிர்பார்த்தது

இதுகுறித்து 'ஒன்இந்தியாவிடம்' பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்" என்றார்.

கேரளா மீது குறி

கேரளா மீது குறி

கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது. அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள். இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன.

உளவுத்துறை தீவிரம்

உளவுத்துறை தீவிரம்

ஆப்கனில் நேற்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை மினி கேரளா என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The United States of America dropped the Mother of all Bombs at Nangarhar in Afghanistan on Thursday and Indian Intelligence agencies suspect that the mini Kerala may have been destroyed. It may be recalled that around 21 Keralites had gone missing last year and as per the Intelligence agencies, they had taken shelter in Nangarhar inAfghanistan.
Please Wait while comments are loading...