சிங்கத்துடன் காரில் ஜாலி ட்ரிப் போன பாகிஸ்தான் தொழிலதிபர்... கிலியான மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கராச்சி : திறந்தவெளி காரில் சிங்கத்தை ஏற்றி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் சக்லைன் ஜாவித். தொழிலதிபரான இவர், மிருகக் காட்சி சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்றை தனது காரின் பின் பகுதியில் அமர வைத்து, கராச்சி நகரில் ஜாவிதி நேற்று இரவு உலா வந்துள்ளார்.

A Pakistani man caught by police while he was driving with Lion

காரில் சிங்கத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சாலையில் ஆட்டோ, டூவிலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் பீதியடைந்தனர். சிங்கம் பாய்ந்து வந்துவிடுமோ என்கிற பயத்திலேயே பலர் சாலையில் ஓரமாக பயணித்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலலு வெளியிட்டதால் பரபரப்பானது.

இந்த வீடியோ ஆதாரத்தின்படி ஜாவித் கைது செய்யப்பட்டார். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மிருகக் காட்சி சாலை நடத்திவரும் ஜாவித், சிங்கத்தை காரில் ஏற்றிச் சென்றது ஏற்க முடியாததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் ஜாவித் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஜாமினில் வெளிவந்தார். ஜாவித் சிங்கத்துடன் ஜாலி ட்ரிப் போன வீடியோவை பார்த்து நீங்களும் ரசியுங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Businessman Saqlain Javed was arrested at Karachi for took his pet lion for a night-time drive through the streets
Please Wait while comments are loading...