Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’ஷாக்’ சீனாவில் இருந்து உ.பி திரும்பியவருக்கு கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் பிஎப் 7 வகை உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி உலுக்கி வரும் நிலையில், அந்த நாட்டில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வந்த இந்தியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நபரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த வேளையில் சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவால் அந்த நாடு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது.

அதிவேகமாக பரவும் பிஎப் 7

அதிவேகமாக பரவும் பிஎப் 7

தினசரி பாதிப்பு கடந்த வாரத்தில் கோடியை தாண்டியதாக கூட சில தகவல்கள் வெளியாகின. இதனை மூடி மறைக்கும் விதமாக தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடப் போவது இல்லை என்று சீனா அறிவித்துள்ளது. இது ஒருபுறம் சீனாவில் பரவி வரும் ஒமிக்ரானின் மாறுபாடு வகை கொரோனாவான பிஎப் 7 அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் உலக நாடுகள் உஷார் ஆகியுள்ளன.

ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம்

ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம்

இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட பேசியிருந்தார். அதேபோல சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் வந்த நபருக்கு தொற்று உறுதி

உத்தர பிரதேசம் வந்த நபருக்கு தொற்று உறுதி

அதேபோல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை தயார் நிலைகளை சரிபார்க்கும் விதமாக வரும் 27 ஆம் தேதி ஒத்திகை நடத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் இருந்து உத்தர பிரதேசம் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 40-வயதான அந்த நபர் டெல்லி வழியாக ஆக்ராவுக்கு வருகை தந்துள்ளார்.

எந்த வகை கொரோனா

எந்த வகை கொரோனா

கடந்த 23 ஆம் தேதி ஆக்ரா திரும்பிய நபர் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து எந்த வகை கொரோனா என்பதை கண்டறிவதற்காக மரபணு ஆய்வகத்திற்கு அவரது மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அலுவலர் அருண் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அருண் ஸ்ரீவத்சவா மேலும் கூறுகையில், "ஆக்ராவில் உள்ள குடியிருப்பு வாசிகள் முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சனிடைசர் போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்த வேண்டு. தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை டோசையும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு மக்கள் உடனடியாக 0562-2600412, 9458569043- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார். அதேபோல், ஆக்ராவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+