பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 20பேர் பலி.. 300பேர் காயம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும்பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சாலைகள் பல்வேறு இடங்களில் பிளந்து காணப்படுகிறது. ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் ஜீலூமிக்கு வடக்கே 22.3 கிலோமீட்டர் தூரத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரிக்கும் எல்லைப்பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு மேல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில். 5.8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A strong 5.8 magnitude earthquake jolted several cities in Pakistan

இஸ்லாமாபாத், ஆசாத் காஷ்மீர், பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் லாகூர் உட்பட பல நகரங்கள் மற்றும் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளை நிலநடுக்கம் தாக்கி உள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, ஸ்வாட், சாஹிவால், ரஹீம் யார்கான் மற்றும் மிர்பூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மிர்பூர் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிர்பூரில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 50 பேர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் அங்கு ஒரு சாலை பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் சில நரங்களில் பல்வேறு கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும்,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லியிலும் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் வீடுகளிலிருந்தும், அலுவலங்களிலிருந்தும் வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+