For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் தெருவில் இனி நடக்க முடியாது.. ஊடகங்கள் மூடப்படும்.. ஆப்கானிய புகைப்படக் கலைஞர் வேதனை!

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

Recommended Video

    பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது.. நாட்டு மக்களுக்கு Taliban-களின் புதிய கட்டுப்பாடு.

    ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
    காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் அங்கு பாதுகாப்புக்கு இருக்கின்றன.

    கொரோனாவை உருவாக்கியது கடவுளோட சூப்பர் கம்யூட்டராம்... சொல்வது அசாம் அமைச்சர் கொரோனாவை உருவாக்கியது கடவுளோட சூப்பர் கம்யூட்டராம்... சொல்வது அசாம் அமைச்சர்

    ஊடகங்களை மூடி விடுவார்கள்

    ஊடகங்களை மூடி விடுவார்கள்

    ''எங்களின் ஆட்சியில் பெண்களுக்கு ஷரியத் சட்டத்தின்படி உரிமை கொடுப்போம்'' என்று தாலிபான்கள் கூறி வந்தாலும் தாலிபான்களின் கடந்த கால வரலாறை மனதில் நிறுத்தி அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறும் ஆப்கானியர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஊடகங்களை முற்றிலுமாக மூடிவிடுவார்கள் என்று ஆப்கானிய புகைப்படக் கலைஞர் மசூத் ஹொசைனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புலிட்சர் பரிசு பெற்றவர்

    புலிட்சர் பரிசு பெற்றவர்

    ஏஜென்ஸ் ஃபிரான்ஸ்-பிரஸ்ஸில் பணிபுரிந்து 2012 இல் புலிட்சர் பரிசு பெற்ற மசூத் ஹொசைனி, இப்போது ஃப்ரீலான்ஸாக இருக்கிறார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நாளில் விமானம் மூலம் அங்கு இருந்து தப்பினார்.தற்போது நெதர்லாந்தில் தங்கியிருக்கும் ஹொசைனி தாலிபன்களின் அடக்குமுறை குறித்து மேலும் கூறியதாவது:- தாலிபான்கள் ஊடகங்களை முற்றிலுமாக மூடிவிடுவார்கள். அவர்கள் இணையத்தை முற்றிலுமாக துண்டித்து அநேகமாக இந்த பிராந்தியத்திற்கான மற்றொரு வட கொரியாவாக ஆப்கானை மாற்றி விடுவார்கள்.

    பெண்கள் நடக்க முடியாது

    பெண்கள் நடக்க முடியாது

    தாலிபான்கள் ஊடகவியலார் ஒருவரைப் பிடிக்கும்போது அவரை கொன்று விடுகிறார்கள். இப்போது இது பொதுவாக ஊடகங்களுக்கு நடந்து வருகிறது. பெண்களுக்கு உரிமை கொடுப்போம். ஊடக சுதந்திரம் இருக்கும் என்று கூறி தாலிபான்கள் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குகிறார்கள்; மேற்கத்தியர்களை முட்டாளாக்குகிறார்கள். நிச்சயமாக எந்த பெண்ணும் தெருவில் நடக்க முடியாது, பெண் ஊடகவியலாளர்கள் மைக்ரோஃபோனுடன் செல்வதை நாம் பார்தோம். ஆனால் இனிமேல் அது சாத்தியமில்லை.

    கதறி அழுதோம்

    கதறி அழுதோம்

    காபூல் விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல் மிகவும் பயங்கரமானவை. ஒரு சிறிய கால்வாயில் பலர் கொல்லப்படுவதையும், அந்த கால்வாய் மக்களின் இரத்தத்தால் தேங்குவதையும் நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. காபூலில் இருந்து விமானம் புறப்பட்டபோது, ​​நாங்கள் கதறி அழுதோம். பல நண்பர்கள், வெளிநாட்டவர்கள் கூட அழுவதை நான் பார்த்தேன், ஏனென்றால் நாங்கள் மீண்டும் காபூலுக்குத் திரும்ப முடியாது என்று அவர்கள் என்னைப் போல உணர்ந்தார்கள்."

    ஆப்கானிஸ்தானை காதலித்தேன்

    ஆப்கானிஸ்தானை காதலித்தேன்

    நான் உண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப விரும்புகிறேன், என் வீடு இருக்கிறது, என் நினைவுகள் உள்ளன. நான் புகைப்படம் எடுத்தல் மூலம் ஆப்கானிஸ்தானை காதலித்தேன், ஆப்கானிஸ்தானின் காரணமாக புகைப்படக்கலையை காதலித்தேன், என்னால் முடிந்ததை செய்தேன். இவ்வாறு மசூத் ஹொசைனி தெரிவித்தார்.

    English summary
    Women can no longer walk on Afghan streets. The Afghan photographer has lamented that the media will be completely shut down
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X