ஆப்கானில் அட்டூழியம்: தீவிரவாதிகள் திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல் கேட்கும் தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைகள் ஓங்கி வரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல்களை கேட்டு மதகுருமார்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. நேட்டோ படைகள் அந்நாட்டை விட்டு வெளியேற தொடங்கி இருந்ததும் அடங்கி இருந்த தலிபான்கள் தலையெடுக்க தொடங்கிவிட்டனர்.

ஆப்கான் ராணுவம் சரண்
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் இப்போது தலிபான்கள் வசமாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான்களிடம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரணடைகின்றனர். சில ஆயிரம் பேர் அண்டை நாடான தஜகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

சிறுமிகள் பட்டியல்
இந்நிலையில் ஆப்கானில் வாழும் அனைத்து மதகுருமார்களுக்கும் தலிபான்கள் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் தங்கள் பகுதிகளில் வசிக்கும் 15 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகள், விதவைகள் பட்டியலை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதமாற்றம் செய்து திருமணம்
தலிபான் தீவிரவாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கவே இந்த பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாம்; பிற மதங்களைச் சேர்ந்த சிறுமிகள், விதவைகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு பின் திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆண்கள், பெண்களுக்கு கட்டுப்பாடுகள்
அத்துடன் பெண்கள் இனிமேல் தனியாக வீதிகளில் நடமாடக் கூடாது; ஆண்களின் துணையுடன்தான் கடைவீதிகளுக்கு வரவேண்டும்; ஆண்கள் தாடியை ஷேவ் செய்வதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். மதத்தின் பெயரால் தலிபான்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications