"டெல்டா பிளஸ்" செஞ்ச வேலையே தாங்க முடியல.. புதிதாக ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் வேற, பரவப்போகுதாம்
பிரான்ஸ்: டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குளிர்காலத்தில் உருமாற்றம் அடைந்த வேறு வகை கொரோனா பரவல் ஏற்படக்கூடும், என்று பிரான்ஸ் நாட்டின் கொரோனாவுக்கான தலைமை ஆலோசகர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டெல்டா உருமாறிய கரோனா வைரஸ் காரணமாக நோய் பாதிப்பு மிக அதிக அளவில் பரவியது. வழக்கமாக பரவும் வேகத்தை விட இந்த வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் அதிகம் பேரை பாதிப்பதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கும், மோசமான நிலைமை உருவானது.

உருமாற்றம் அடையும் வைரஸ்கள் பாதிப்பை அதிகப்படுத்துவது தான் கடந்த காலங்களில் நடந்தவை. இந்த நிலையில்தான் இன்னொரு உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் ஆலோசகர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தடுப்பூசி போட்ட நாடுகள் , தடுப்பூசி போடாத நாடுகள் இந்த இருவகை சவால்களைதான் மனித சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை முதல், தியேட்டர்கள், மியூசியம், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவற்றுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதா என்பது பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அவர்களின் உரிமையை மறுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அங்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் இன்று காலை பிரான்ஸ் நாட்டில் நிறைவேறி உள்ள ஒரு சட்ட மசோதாவின்படி, சுகாதாரத்துறை மற்றும் சமூகப் பணியாளர்கள் அனைவரும் செப்டம்பர் மாதத்திற்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video
அங்குள்ள மேலவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தத் துறையில் பணியாற்ற கூடிய யாரும் தடுப்பூசி போடாமல் இருக்க முடியாது என்பது குறிபிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications