For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபனாகவே நடக்கும் "தொழில்.. ஆர்டர் செய்தாலே போதும்.. வீடு தேடி வரும் AK 47.. பகீர் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் டோர் டெலிவரி ஆகின்றன துப்பாக்கிகள்

Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: பாகிஸ்தானில் ஆன்லைனிலேயே துப்பாக்கியை ஆர்டர் வீடு தேடி வந்து தந்துவிட்டு போகிறார்களாம்.. அதுவும் ஏகே 47 என்றாலும் டோர் டெலிவரி உண்டாம்..!

Recommended Video

    துப்பாக்கிகளை Door Delivery செய்யும் Pakistan | Oneindia Tamil

    ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது, உலகமே சுருங்கி கொண்டிருக்கிறது.. சாப்பாடு முதல் துணிமணி வரை அனைத்துமே ஆன்லைனில் செய்து கொள்கின்றனர்..

    இதற்கெல்லாம் வசதிகள் ஒருபக்கம் காரணம் என்றாலும், மற்றொரு புறம் கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் நேரத்தை இந்த டோர் டெலிவரிகள் குறைக்கின்றன..

    இந்திய ராணுவத்திற்கு ஏகே 203 ரக துப்பாக்கிகள் வலுசேர்க்குமா?.. சிறப்பம்சங்கள் என்ன? இந்திய ராணுவத்திற்கு ஏகே 203 ரக துப்பாக்கிகள் வலுசேர்க்குமா?.. சிறப்பம்சங்கள் என்ன?

    வர்த்தகம்

    வர்த்தகம்

    பரபரக்கும் இயந்திர உலகில் நேரம் மிச்சமாவதால், ஆன்லைன் சேவைகளின் அத்தியாவசியமும் பெருகி கொண்டு வருகிறது.. அதேசமயம், ஆன்லைன் வரத்தகத்தால், சில்லறை வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஒரு பகீர் செய்தி வெளிவந்து பலரையும் வியக்க வைத்து வருகிறது..

    துப்பாக்கி

    துப்பாக்கி

    கைபர் பாக்துன்வா மாகாணத்துக்குட்பட்ட தாரா அடம்கெல் என்ற இடத்தில் துப்பாக்கியை டோர் டெலிவரி செய்து கொள்கிறார்களாம்.. இங்குள்ளவர்களுக்கு துப்பாக்கி வேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு தகவல் சொல்ல வேண்டுமாம்.. எந்த ரக துப்பாக்கி வேண்டும் என்பதை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.. பிறகு வீட்டு அட்ரஸையும் அதில் பதிவு செய்ய வேண்டும்..

     டெலிவரி பணம்

    டெலிவரி பணம்

    அதற்கு பிறகு 10 ஆயிரம் ரூபாய் பணம் அட்வான்ஸ் தந்தால் போதும்.. கொஞ்ச நேரத்தில் துப்பாக்கி வீட்டுக்கு வந்துவிடுமாம். 9எம்.எம். துப்பாக்கியில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி வரை எல்லாமே கிடைக்கும். அந்த துப்பாக்கியை டெலிவரி செய்யும்போது, அது சரியாக வேலை செய்கிறதா என்று செக் பண்ணிவிட்டு, பிறகு ஒப்படைப்பாராம்.. அப்போது மிச்ச பணத்தை தந்தால் போதும்..

     வியாபாரம்

    வியாபாரம்

    இப்படி ஒரு வியாபாரம் அங்கு தலைதூக்கி உள்ளது அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.. ஒரு துப்பாக்கியை நாம் வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.. எல்லாருக்குமே அதற்கான லைசென்ஸ் கிடைத்துவிட்டது.. ஆர்டர் செய்பவர் லைசென்ஸ் வைத்திருக்கிறாரா என்பதை கூட தெரிந்துகொள்ளாமல் துப்பாக்கிகள் டோர் டெலிவரி ஆகி கொண்டிருப்பது மக்களை அதிர வைத்து வருகிறது... அதுமட்டுமல்ல இப்படி துப்பாக்கிகள் வாங்குவதை அங்குள்ள சாமா என்ற டிவி பேட்டியுடன் வெளியிட்டுள்ளது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    AK-47 being home delivered like pizza in Pakistan, Shocking business
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X