மோசமாகும் நிலைமை.. இந்தியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
Recommended Video
இதுவரை மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 8ஐ கைப்பற்றிவிட்டதால் நிலைமை அங்குமோசமாகி உள்ளது. இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,
ஆப்கானிஸ்தானில் 2001 ஆண்டில் தொடங்கிய உள்நாட்டு போர், அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தால் மீண்டும் மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது.

கைவிட்ட அமெரிக்கா
ஒசாமா பின்லேடனை கொன்றதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதிய அமெரிக்கப் படைகள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கின. இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேற உள்ளன.

ஒரே நாளில் இரண்டு
இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திகொண்ட தலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான சண்டையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் 8 மாகாண தலைநகரங்களை கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்றி உள்ளனர். இதுவரையில் மொத்தமுள்ள 34 மாகாண தலைநகரங்களில் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

ஆப்கன் கோரிக்கை
தலிபான்களை ஒடுக்க அமெரிக்கா கிட்டத்தட்ட கைவிரித்துவிட்டது. இந்தியாவின் உதவியை அது நாடி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹனீப் ஆத்மர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

இந்திய அரசு உத்தரவு
இதனிடையே இந்திய குடிமக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது. வணிக விமான சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன், தாய்நாடு திரும்புவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications