For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பலியானவர் உடல்... 14 வருடத்திற்குப் பிறகு அடையாளம் காணப்பட்டது!

Google Oneindia Tamil News

நியூஜெர்சி : அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பலியான ஒருவரின் அடையாளங்கள், கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை அல் கொய்தாவினர் விமானம் கொண்டு தாக்கினர். உலகையே உறையச் செய்த இந்த தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இத்தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, சில உடல்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.

American 9/11 victim identified, nearly 14 years on

இந்நிலையில், இத்தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆனநிலையில், தற்போது அதில் பலியான ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. நியூயார்க் மருத்துவ ஆய்வாளர் நடத்திய சோதனையில், அந்த உடல் நியூஜெர்சியைச் சேர்ந்த 26 வயது மேத்யூ டேவிட் யார்னெல் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவரையும் சேர்த்து இதுவரை 1640 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதே போல், இன்னும் காணாமல் போனவர்களாகக் கருதப்படும் 1,113 பேர்களின் உடல்களும், 7,703 உடல் பாகங்களும் அடையாளம் காணப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

English summary
Nearly 14 years after the September 11 attacks on New York, the remains of a victim from the neighboring state of New Jersey has finally been identified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X