என்னங்க இது? நீண்ட வால் மற்றும் நகங்களுடன் மர்ம விலங்கு..ஏலியன் வந்துட்டாங்களா.. ஆஸி.யில் ஆச்சரியம்
கான்பெரா : ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெரிய நகங்களுடன்கூடிய அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியிருக்கிய நிலையில் அது ஏலியனா என சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
மேற்கத்திய உலக மக்கள் வானத்தில் கடந்த நூறு வருடங்களில் பறக்கும்தட்டைப் போன்ற பல வடிவங்களையும் , ஏலியன் போன்ற மர்ம உயிரினங்களை பார்த்ததாக கூறி இருக்கிறார்கள்
வழக்கமான விமானம், ராக்கெட் போன்ற வடிவங்கள் இல்லாமல் பல வடிவங்கள் வானில் மர்மமாக தெரிந்திருக்கின்றன. ஆனால் அவை குறித்த முழு தகவல்கள் இதுவரை இல்லை.

ஏலியன் எனும் மர்மம்
அடையாளம் காண முடியாத இத்தகைய வடிவங்களுக்கு அறிவியல் உலகம் சூட்டியிருக்கும் பெயர் UFO. Unidentified Flying Objects. அடையாளம் கண்டிட முடியாத பறக்கும் பொருள்கள். பறக்கும்தட்டு எனும் போதே ஏலியன்கள் ஞாபகம் வந்துவிடும் நம்மை இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் அறிவோடு இருப்போமா என்ற கேள்விக்கான விடைதேட உலக நாடுகள் பலவும் பகீரத பிரயத்தனங்களை செய்து வருகின்றன.

மர்ம உயிரினம்
மேற்கத்திய நாடுகளில் அடிக்கடி ஏலியன்களை பார்த்தோம் பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், அவற்றை விஞ்ஞானிகள் மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் கண்டிப்பாக நம்மைப் போன்ற பேசக்கூடிய சிந்திக்கக்கூடிய கிரகவாசிகள் இருக்கலாம் எனவும் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இணையத்தில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ள ஒரு மர்ம உயிரினம்.

விசித்திர உணர்வு
குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெரிய நகங்களுடன் ஒதுங்கியிருக்கிய அந்த உயிரினத்துக்கு ஊர்வன போன்ற மண்டை ஓடும், தளர்ந்த கைகால்களும், நீண்ட வால் மற்றும் நகங்களும் இருப்பது பார்ப்போருக்கு விசித்திர உணர்வை கொடுக்கிறது. இந்த உயிரினத்தின் புகைப்படத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் டான் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர், ''இதுபோன்ற உயிரினங்களை பார்க்கும்போது வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக மக்கள் கூறுவதை உணரமுடிகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
இதுகுறித்து அலெக்ஸ் கூறுகையில், காலை நடை பயிற்சியின் போது மரூச்சிடோர் கடற்கரையில் இந்த உயிரினத்தை கண்டுபிடித்தேன். நான் வித்தியாசமான ஒன்றைக் கண்டு தடுமாறிவிட்டேன், இது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்ததாக மக்கள் கூறும் நிலையில் இதுவும் அதேபோல் தன் உள்ளது, விஷயங்களில் இதுவும் ஒன்று" என்றும் கூறினார். ஆஸ்திரேலிய கடற்கரையில் விசித்திரமான உயிரினங்கள் கரை ஒதுங்குவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் சிட்னியில் உள்ள வாரியவுட் கடற்கரையில் ஒரு வினோதமான உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications