For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புருஷன் பொண்டாட்டி தகராறு... எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான்- சீனாவில் கார் மேல போன மானம்

கணவன் மனைவி சண்டை நான்கு சுவற்றுக்குள் இருக்கும் வரைக்கும்தான் பாதுகாப்பானது. வீட்டை தாண்டி வெளியே வந்தால் மானமே போய்விடும்.

Google Oneindia Tamil News

பீஜிங்: தமிழ் சினிமாவில் மனைவி கையால் அடிவாங்கும் வடிவேலுவை பார்த்திருப்போம் கோவை சரளா சும்மா பறந்து பறந்து அடிப்பார். அது படத்திற்காக வைக்கப்பட்ட காமெடி. சீனாவில் பெண் ஒருவர் தனது கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு நடு ரோட்டில் கார் மீது ஏறி நின்று கத்தி குவித்துள்ளார். அந்த சண்டையை இப்போது உலகமே பார்க்கும் அளவிற்கு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போனின் உபயத்தால் உலகமே கைக்குள் அடங்கிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது செய்தால் கூட அதை வீடியோவாக எடுத்து வைரலாக்கிவிடுகின்றனர்.

Angry Wife Climbs on Top of Car Roof at Signal in China After Fight With Husband

சீனாவைச் சேர்ந்த மா என்ற பெண் தனது கணவருடன் ஜியாங்ஸி பகுதிக்கு காரில் போய் கொண்டிருந்தார். காரில் போகும் போதே கணவன் மனைவிக்கு என்ன தகராறோ தெரியவில்லை சண்டை முற்றியது. கார் கரெக்டாக சிக்னலில் நின்றது. அப்போது கதவை திறந்த மா உடனே காரின் டாப்பில் ஏறி நின்று கத்தினார். கணவரை திட்டி தீர்த்தார்.

இதை வேடிக்கை பார்த்த சிலர் உடனே கார் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. பலரும் ஷேர் செய்ய கணவன் மனைவி சண்டை செம வைரல் ஆனது. இந்த காட்சியால் டிராபிக் பாதிக்கப்படவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன் மனைவியை விசாரித்தனர். அப்போதுதான் அந்த நபரிடம் கார் ஓட்ட லைசென்ஸ் இல்லாதது தெரியவந்தது. அப்புறம் என்ன மனைவி மா உடன் சண்டை போட்ட அந்த கணவரை கைது செய்து பைன் போட்டனர் போலீசார்.

நடுரோட்டில் சண்டை போட்டு லைசென்ஸ் இல்லாததை இப்படி காட்டிக்கொடுத்து அபராதம் கட்ட வைத்து விட்டாலே என்று கடுப்பாகிப்போனார் கணவர். இனி சண்டை போட்டாலும் சத்தம் போடாம சண்டை போடுங்க மக்களே.

English summary
The woman surnamed Ma got into a fight with her husband while they were driving on a road in Xiangxi, Hunan province in South China. The angry woman got atop the car roof and was seen stamping on the car. The shocking incident took place right in the middle of the road causing some traffic disruption as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X