எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. அடிமைகளா? - மேற்கத்திய நாடுகளுக்கு இம்ரான் கான் கண்டனம்
ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கராச்சி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ஆம் தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த போதிலும், போரை நிறுத்த முடியவில்லை. உக்ரைன் தனி ஒரு நாடாக நின்று சமாளித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது. கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷ்யா தாக்குதல்
அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாகப் போராடி வருகிறது. எனவே, இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன. இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

தூதரக அதிகாரிகள் கடிதம்
வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1ஆம்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் கண்டனம்
இதுகுறித்து பேசியுள்ள இம்ரான்கான், அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்ய வேண்டுமா? ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?'' என்று கேட்டுள்ளார்

எந்த முகாமிலும் இல்லை
மேலும், நாங்கள் ரஷ்யாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்பாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்பாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications