பள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை

Subscribe to Oneindia Tamil

அரிசோனா: பள்ளி மாணவனை மயக்கி அவனுடன் பல முறை தகாத உறவு வைத்திருந்த ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரிசோனா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறை தண்டனை பெற்ற அந்த ஆசிரியரின் பெயர் பிரிட்டனி ஸமோரா என்பதாகும். 27 வயதான அவர் அரிசோனா பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். திருமணமான ஸமோராவிற்கு காம உணர்ச்சி அதிகம். அதற்கு வடிகாலாக பள்ளி மாணவனை சிக்கவைத்தார்.

13 வயதான பள்ளி மாணவன் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனது செல்போனில் இருந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். ஆபாச படங்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பி மாணவனை மயக்கினார்.

பள்ளி வகுப்பறையிலும் காருக்குள்ளும் நினைத்த போதெல்லாம் மாணவனுடன் உறவு கொண்டார். நினைத்த போதெல்லாம் மாணவனை தனது காம ஆசைக்கு பயன்படுத்தினார். மாணவனுக்கு படிப்பின்மீதான ஆர்வம் குறைந்து போனது.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

அப்பாவியாக இருந்த தங்களின் மகனின் நடந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் மாணவனின் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. ஒருநாள் தற்செயலாக மகனின் செல்போனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அதில் ஆபாச மெசேஜ்களும், போட்டோக்களும் இருந்தன. மகனிடம் விசாரிக்கவே, நடந்த சம்பவங்களை கூறி அழுதான்.

மைனர் சிறுவனுடன் உறவு

மைனர் சிறுவனுடன் உறவு

அமெரிக்காவில் மைனர் சிறுவர்களுடன் உறவில் ஈடுபடுவது கடுமையான குற்றம். இதற்கு தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். டீச்சரின் ஈனத்தனமான செயல் பற்றி போலீசில் புகார் அளித்தனர். ஆசிரியை அனுப்பிய ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ்களையும், புகைப்படங்களையும் ஆதாராமாக காட்டியதால் டீச்சர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.

20 ஆண்டுகள் சிறை

20 ஆண்டுகள் சிறை

புகாரின் பேரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனி ஸமோராவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அரிசோனா நீதிமன்றத்தில் ஓராண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். மைனர் சிறுவன் என்றும் பாராமல் மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். நீதிபதி தீர்ப்பை வாசித்த உடன் கண்ணீர் விட்டு அழுதார் ஆசிரியை.

சிறுவனிடம் மன்னிப்பு

சிறுவனிடம் மன்னிப்பு


தான் தவறிழைத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டார். சமுதாயத்தை ஒருபோதும் அச்சுறுத்தியதில்லை என்றும் கூறினார். சட்டத்தை மதிப்பதாகவும் கூறிய அவர், பாதிக்கப்பட்ட அந்த சிறுவனிடமும், அவனது பெற்றோரிடமும் மன்னிப்பு கோரினார். 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரிட்டனி நன்னடத்தை விதியால் விடுதலை செய்யப்பட மாட்டார். 49 வயதில்தான் அவர் வெளி உலகை காண்பார். காம இச்சைக்கு பள்ளி மாணவனை பயன்படுத்திக்கொண்டதால் தனது வாழ்நாளின் இளமைக்காலத்தை சிறையில் செலவழிக்கப் போகிறார் அந்த முன்னாள் ஆசிரியை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+