மசாஜ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 18 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் மசாஜ் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
சீஜியாங்: சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள தைவூ நகரில் மசாஜ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் மாசாஜ் நிலையத்திற்கு வந்திருந்தனர். இந்த மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை எதிர்பாரதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஜன்னலை உடைத்து தப்பிய மக்கள்
தரைத்தளத்தில் பற்றிய தீயானது அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது. இதில் கட்டத்தில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர் தப்பிக்க ஜன்னலை உடைத்து வெளியே குதித்தனர்.
வெடித்து சிதறிய கண்ணாடிகள்
கார்கள், இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. காற்றின் வேகத்தால் பரவிய தீயின் உக்கிரத்தில் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
18 பேர் உடல் கருகி பலி
இருப்பினும் இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காரணம் மர்மமாகவே உள்ளது
மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications