For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; 100 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் சனிக்கிழமை மாலை குண்டுவெடித்ததில் 43 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள லாஸ்பெல்ல என்ற இடத்தில் மசூதியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெல்லா என்ற இடத்தில் ஷா நூரானி என்ற பள்ளி வாசல் உள்ளது. இங்கு 500 பேர் நேற்று மாலை தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர். அப்போது பள்ளி வாசல் அருகே பயங்கர சத்தத்துடன் திடீரென குண்டுவெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 43 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

At least 30 killed in huge blast in Balochistan

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனமங்களும் விரைந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

English summary
30 people were killed and more than 100 have been injured in a huge blast in Shah Noorani shrine in Balochistan’s Lasbella district on Saturday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X