ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி
பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது.
மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்குகளும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

வெள்ளம்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு ஐரோப்பா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் இருக்கும் வீடுகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் குறிப்பாக ஜெர்மனி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

42 பேர் பலி
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெர்மனி நாட்டில் மட்டும் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மீட்புப் பணிகளில் அந்நாட்டின் ராணுவமும் போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள நீர் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். ஜெர்மனி நாட்டில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பாக இது கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

அண்டை நாடுகள்
உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வெள்ளத்தால் ஜெர்மனி மட்டுமின்றி இதர ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம் நாட்டில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. ஆபத்தான பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதேபோல நெதர்லாந்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications