For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல்: 11 சிறுவர்கள் உள்பட 56 பேர் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெய்ரூட்: சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட அப்பாவி மக்கள் 56 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

At least 56 civilians killed in Syria

இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது.

அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசுவதற்கு பதிலாக தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன.

இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட அப்பாவி மக்கள் 56 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

English summary
Suspected U.S. coalition strikes kill 56 civilians in IS-held Syrian city, included 11 children, and that dozens more people were wounded
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X