For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது கல்வீசி தாக்குதல்.. வன்முறை கும்பலிடம் சிக்கிய பக்தர்கள்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் வழிபாட்டிடத்தில் கல் வீசி சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ளது அந்த குருத்வாரா. இங்குதான் சீக்கிய மத நிறுவனரான, குருநானக் பிறந்தார். எனவே, இது சீக்கியர்களுக்கு புனித இடமாக கருதப்படுகிறது.

Attack took place in Pakistan Gurdwara Nankana Sahib

குருநானக் 550வது பிறந்த வருடத்தையொட்டி, குருத்வாராவிற்கு ஏராளமான சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான், குருத்வாரா மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, யாத்தரீகர்கள் நிலைமை என்னவானதோ என்ற பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், கல் வீச்சு சம்பவம் குறித்து தலையிடுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் வாயிலாக இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

ஷிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலும் இந்த சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை டுவிட்டரில் தெரிவித்தார். குருநானக் தேவ் பிறப்பிடமான குருத்வாரா மீதான தாக்குதல் ஒரு இழிவான செயல், இதை பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸதான் பிரதமரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானில் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணும் என நம்புகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Punjab CM Amarinder singh appealed to Imran Khan to immediately intervene to ensure that the devotees stranded in Gurdwara Nankana Sahib are rescued and the historic Gurdwara is saved from the angry mob surrounding it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X