For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துக: ஆஸி. எம்.பி. லீ ரியன்னோன்

By Mathi
Google Oneindia Tamil News

சிட்னி: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார்.

Australian MP suggests taking Rajapaksa to The Hague

ஆனால் மகிந்த ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெறவில்லை. ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் ராஜபக்சே பிரதமராக முடியாத நிலை ஏற்பட்ட உடனேயே ஆஸ்திரேலியாவின் எம்.பி. லீ ரியன்னோன் தமது ட்விட்டர் பக்கத்தில், போர்க்குற்றத்துக்காக மகிந்த ராஜபக்சேவை திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது இலங்கை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

English summary
Lee Rhiannon, a New South Wales Senator in Australia stated that former Srilanka President Mahinda Rajapaksa's election defeat was a step closer to having him and his brothers tried in The Hague for war crimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X