வங்கதேச பொதுத்தேர்தல்.. பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி.. 5-வது முறை ஆட்சி அமைக்கிறார்
டாக்கா: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்கதேசம். அங்கு பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. எனினும், தேர்தலுக்கு முன்பாக பொதுவான ஒரு அரசை நிறுவி தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனால், வங்கதேசத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்து இருந்தன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா எளிதில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் இன்று ஓட்டு செலுத்தினர். இந்த தேர்தலில் பதிவான உடனடியாக எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் 27 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 436 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டு இருந்தனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 264 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வென்றுள்ளது. கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹாசனும் தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications