For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனுசங்க தான் அப்டின்னா, இப்போ ‘நாயும்’.. கரடிகிட்ட எதை லஞ்சமா வாங்கியிருக்குனு பாருங்க!

கரடியிடம் எலும்புத் துண்டை நாய் லஞ்சமாக வாங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கனடா நாட்டில் ஒரு நாய்க்கு, கரடி ஒன்று லஞ்சம் கொடுத்த விசித்திரமான கதை வைரலாகி வருகிறது.
கனடா நாட்டின் வடக்கு ஓன்டாரியோ பகுதியில் வசித்து வருபவர் ஜெசி ஜோர்டன். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'தனது செல்ல நாய் பிரிக், மான் எழும்புகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, ஒரு கரடியை தனது வீட்டு வளாகத்தில் உலாவவிட்டதாக' கூறியிருந்தார். இது ஒருமுறையல்ல, மூன்று முறை இதேபோன்று நடந்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

bear bribes watch dog a bone for free access

ஜெசியின் இந்த பதிவு வைரலாகிவிட்டது. ஏராளமானவர்கள் அவரது டிவீட்டை ரீடிவீட் செய்தும், பதில் கூறியும் வருகின்றனர். இதனால் ஜெசி தனது நோட்டிபிகேஷனை அனைத்து வைத்துவிட்டார்.

மழையில் இருந்து குட்டிகளைக் காப்பாற்றும் கொரில்லாக்கள்.. வைரலாகும் வீடியோ! மழையில் இருந்து குட்டிகளைக் காப்பாற்றும் கொரில்லாக்கள்.. வைரலாகும் வீடியோ!

"நான் அந்த பதிவின் நோட்டிவிகேஷனை அணைத்து வைக்கிறேன். வடக்கு ஓட்டாரியோ கரடிகள் ஒரு தொல்லைதான். ஆனால் ஆபத்தானவை அல்ல. இதனால் பிரிக்கிற்கு எதுவும் ஆகாது. ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அவனை நான் வெளியில் கட்டிப் போட மாட்டேன்", என ஜெசி ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் ஜெசி ஜோர்டனை பலரும் கலாய்த்துள்ளனர். பிரிக்கிற்கு ஜெசி கொடுக்கும் சம்பளம் போதவில்லை என ஒருவர் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் மனிதர்களிடம் உள்ள இந்த தீய பழக்கம், கனடாவில் ஒரு நாய்க்கும், கரடிக்கும் இருப்பது வியப்பை அளிக்கின்றது. 'மனுஷங்கதான் லஞ்சம் வாங்குறாங்கன்னு பார்த்தா இப்போ நாய்க்கூட லஞ்சம் வாங்க ஆரம்பிச்சிடுச்சே' எனும் உங்க மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்குது பாஸ்.

English summary
In Canada's nothern Ontario, a wild bear brideb a dear bone to a watch dog for a free access of a household. This hilarious stroy goes viral in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X