For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயேசுவின் நெஞ்சு பகுதியில் "ஜன்னல்".. கை மட்டும் 36 மீ. அகலம்.. உலகின் பெரிய சிலை ரெடியாகிறது.. இங்கே

இயேசு கிறிஸ்து சிலை பிரேசிலில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது

Google Oneindia Tamil News

பிரஸ்ஸிலா: உலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறிஸ்து சிலை ஒன்று தயாராகி வருகிறது.. 141 அடி கொண்ட அந்த சிலை விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவின் சிலைகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.. இதில் பல வரலாற்று சிறப்பு மிக்கவையும்கூட... அவைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ரியோவில் உள்ள இயேசு சிலை உலக புகழ்பெற்றதாகும்.. இது கடந்த 1922ம் ஆண்டில் இருந்து 1931ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாகும்

 உயரமான சிலை

உயரமான சிலை

இந்த சிலையை காண வருடந்தோறும் ஏராளமான மக்கள் வந்து போவார்கள்.. எனினும், இப்போது ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் உயரமான இயேசு சிலை கட்டப்படுகிறது.. இந்த சிலைக்கு கிறிஸ்ட் தி ப்ரொடெக்டர் அதாவது கிறிஸ்து பாதுகாவலர் என்று பெயரிடப்பட்டுள்ளது..

 கான்கிரீட்

கான்கிரீட்

இந்த நகரில் மோரோதாஸ் ஆண்டனாஸ் என்ற மலை உள்ளது.. இந்த மலைமீதுதான் இயேசு சிலை உருவாகி உள்ளது.. இதன் உயரம் 141 அடியாகும்.. அதாவது, இதுதான் உலகின் மூன்றாவது உயரமான இயேசு கிறிஸ்து சிலையாக இருக்குமாம்.. ஒரு கையிலிருந்து மற்றொரு கை வரை இந்த சிலை 36 மீட்டர் அகலம் கொண்டது.. இம்மலையில், உலோக கட்டமைப்பின் மீது கான்கிரீட் போட்டு, அதற்கு மேல் சிலையை கட்டுகிறார்கள்.. இந்த இயேசு சிலையின் நெஞ்சு பகுதியில், இதய வடிவில் ஒரு ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது..

 வியூ பாயிண்ட்

வியூ பாயிண்ட்

இதிலிருந்து அந்த மொத்த நகரையும் பார்க்க முடியும்.. வியூ பாயிண்ட் மார்பு பகுதியில்தான் வைத்துள்ளனர். கடந்த 2019 முதலே இந்த சிலையை கட்டும் பணி ஆரம்பமாகிவிட்டது.. இதில், இயேசு கிறிஸ்துவின் தலை மற்றும் விரிந்த கைகள் கடந்த வாரம்தான் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.. இதுபோல ஒரு சிலையை கட்டலாம் என்று யோசனை சொன்னதே அர்ரொல்டூ கான்சாட்டி என்பவர்தானாம்..

அரசியல்வாதி

அரசியல்வாதி

இவர் ஒரு உள்ளூர் அரசியல்வாதி.. ஆனால், இந்த சிலையை பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டார். தற்போது சிலையின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது.. 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த சிலையின் கட்டுமானம், இந்த வருட கடைசிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த சிலை உருவாக்கத்திற்கு ஏராளமான தனிநபர்கள், பல நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகிறார்களாம்..

 கிறிஸ்து சிலை

கிறிஸ்து சிலை

இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள பண்ட்டு புராக்கே சிலை 52.55 மீட்டர் உயரம் கொண்டது.. அதேபோல, போலாந்தில் உள்ள கிறிஸ்ட் த கிங் என்ற சிலை 52.5 மீட்டர் உயரம் கொண்டது.. எனினும் தற்போதுள்ள இந்த சிலை உருவானால், இதுதான் பெரிய சிலையாக உலக அளவில் பெருமை சேர்க்கும்.. இது உலகின் மிகப்பெரிய கிறிஸ்து சிலை. எப்படியும் வரும் ஆண்டே பொதுமக்கள் பார்வைக்கு இந்த சிலை திறந்து வைக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
biggest and mass jesus christ statue will be placed at south brazil soon இயேசு கிறிஸ்து சிலை பிரேசிலில் பிரம்மாண்டமமாக தயாராகி வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X