For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் 'தலையெழுத்தை' நிர்ணயிக்கும் பில்டெர்பெர்க் ரகசிய குழு முக்கிய ஆலோசனை.. அடுத்து என்ன நடக்குமோ?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த அதிகார வர்க்க கூட்டமைப்பான பில்டெர்பெர்க் அமைப்பு அமெரிக்காவில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளது. அடுத்தகட்டமாக அந்த அமைப்பு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை உலக நாடுகள் உற்று நோக்கிக்கொண்டுள்ளன.

மேலை நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள், மிகபெரிய வங்கி, கம்பெனிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அதிகார வர்க்கங்களில் இருக்கும் ஒரு சில முக்கியமான புள்ளிகளின் அதிகார பூர்வமற்ற குழுதான், பில்டெர்பெர்க்.

உலகின் பொருளாதார போக்கையே தீர்மானிப்பது பில்டெர்பெர்க் அமைப்புதான் என்பது உயர்மட்டத்தில் உள்ளோர்கள் கூறும் தகவல்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

1954ல் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்பு அலைகளை பற்றி ஆராய முதன் முதலாக நெதர்லாந்து நாட்டில் உள்ள பில்டெர்பெர்க் என்ற உணவகத்தில் கூட்டபட்டதால் இதற்கு பில்டெர்பெர்க் குழுமம் என்ற பெயர் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,வங்கி நிறுவனர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனியை சேர்ந்தவர்கள் என 21 நாடுகளை சேர்ந்த சுமார் 131 பேரை கொண்ட குழுமம் இது.

ரகசியம்

ரகசியம்

இதன் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களும் மிகவும் ரகசியமாக வைக்க படுகிறது. எனவே, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விவகாரங்கள் குறித்து பல்வேறு, புரளிகளும் வெளிவரும். பில்டெர்க் குழுமம் என்பது அதிகார பூர்வமற்ற குழுமம் என்பதால், அது பற்றி வரும் செய்திகள் பற்றி யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை .

ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியன்

இந்த குழு மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியது, ஐரோப்பிய யூனியன் உருவாக்கம் தொடர்பாகத்தான். ஐரோப்பிய யூனியனை உருவாக்கி ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகாரத்தை இந்த யூனியனுக்கு மாற்ற முயற்சி செய்தது இக்குழுவின் முயற்சிதான் எனக்கூறப்படுகிறது. இந்த வருடம் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஆலோசனை 4 நாட்களுக்கு நடைபெற்றுள்ளது. முற்றிலும் மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனைகள் நடந்துள்ளது.

ட்ரம்ப் பற்றி ஆலோசனை

ட்ரம்ப் பற்றி ஆலோசனை

இந்த ஆண்டு விவாதிக்கும் விஷயங்களாக 13 விவகாரங்கள் கையில் எடுக்கப்பட்டன. அதில் முதன்மையானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி ரிப்போர்ட். இதுகுறித்து அறிந்த ட்ரம்ப், மிகவும் ஜாக்கிரதையாக தனது வணிக துறை செயலாளர் வில்பர் ரோஸ் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர், மற்றும் பீட்டர் தியல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த ஆட்டம் என்ன?

அடுத்த ஆட்டம் என்ன?

கூட்டம் நடைபெற்ற ஹோட்டலை சுற்றிலும் புதிதாக நீண்ட நெடிய மரங்கள் நட்டு வைக்கப்பட்டன. இதன்மூலம், கூட்டத்தில் பங்கேற்கும் விஐபிகளை யாரும் புகைப்படம் எடுத்துவிடாதபடி தடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாட்டுவிவகாரங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வருடம் இந்த குழு என்ன சித்து வேலைகளை செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

English summary
A secretive group of elite group of power brokers was met in the US state of Virginia for closed-door discussions over four days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X