உவ்வே.. காரெல்லாம் நிரம்பிய பூச்சிகள்.. சீனாவில் திடீரென பெய்த புழு மழை? ஷாக் வீடியோ..உண்மை என்ன?
பெய்ஜிங்: ஆலங்கட்டி மழை போல் சீனாவில் திடீரென புழு மழை பெய்ததாகவும், இந்த புழு மழையில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடை பிடித்து செல்வதாகவும் இணையதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சீனாவில் புழு மழை பெய்ததா? காரெல்லாம் புழு, பூச்சிகள் நிரம்பி வழிய என்ன காரணம்? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் இயல்பாக மழை பெய்கிறது. சில சந்தர்ப்பங்களில் ஆலங்கட்டி மழை பொழியும். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பனிக்காலத்தில் பனி மழையாக பொழிந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது சீனாவில் புழு மழை பெய்துள்ளதாக வீடியோவுடன் தகவல் பரவி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தான் சீனாவில் புழுமழை பெய்ததா? இல்லையா என்பது பற்றிய முழுதகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கார்களில் நிரம்பிய புழுக்கள்
சீனாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது சாலைகளில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கார்களின் மீது புழுக்கள், கம்பளிப்பூச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. சாலைகளிலும் புழு, பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.

புழு மழை பெய்ததாக தகவல்
மேலும் அங்குள்ள மக்கள் அனைவரும் குடைகளை பயன்படுத்தி செல்லும் நிலையில் சீனாவில் புழு மழை பெய்ததாக தகவல்கள் பரவின. சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் தான் இந்த புழு மழை பெய்ததாகவும், பொதுமக்கள் புழு, பூச்சிகளில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்வதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

புழு மழையா? எழுந்த கேள்விகள்
அதாவது மழை பெய்யும்போது வானத்தில் இருந்து நீர்த்துளிகள் விழுவதுபோல் லியோனிங் மாகாணத்தில் கொத்து கொத்தாக புழுக்கள், கம்பளிப்பூச்சிகள் விழுந்துள்ளதாகவும், இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தற்போது குடைகளை பயன்படுத்தி செல்வதாகவும் பதிவிட்டு உள்ளனர். இதை பார்த்த பலருக்கும் புழு மழை எப்படி பொழியும் ? என்ற கேள்வியை இணையதளங்களில் எழுப்பி உள்ளனர்.

என்ன நடந்து இருக்கலாம்?
இதுதொடர்பாக அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் மதர் நேச்சர் நெட்வொர்க் இதழ் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஏதேனும் ஒரு பகுதியில் சூறைக்காற்று வீசினால் புழுதி பரப்பது போல் அங்கு வாழும் புழு, பூச்சிகள் இன்னொரு இடத்துக்கு அடித்து செல்லப்படும். அப்படியான ஒரு நிகழ்வால் தான் இதுபோன்ற சம்பவம் நடக்கின்றன'' என விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் சீனாவில் புழு மழை பெய்யவில்லை எனவும், சூறைக்காற்றில் புழுக்கள் அடித்து வரப்பட்டு இருக்கலாம் எனவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications