இந்தியாவின் பணக்காரர்கள்.. உயர்சாதியினர் நம்பர் ஒன்! வறுமை வரிசையில் கடைசி இடம் -பழங்குடி நிலை மோசம்
பாரிஸ்: இந்தியாவில் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவாதப்பொருளாகி உள்ள நிலையில், இந்தியாவில் வறுமையான சமுதாயங்களின் பட்டியலில் உயர் சாதியினர்ள் கடைசி இடத்தில் இருப்பதாக பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரீஸ் ஸ்கூல் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனம் இந்தியாவில் வறுமையான நிலையில் வசிக்கும் சமூகங்களின் விகிதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், உயர்சாதியினர் என 5 சமுதாயத்தினரின் வறுமை விகிதம் குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆய்வு
இதில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களில் எத்தனை சதவீதம் பேர் மிகவும் வறுமை நிலையிலும், ஏழ்மை நிலையிலும் பணக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ளனர் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பழங்குடினர்களே மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மிகவும் வறுமை
இதில் பழங்குடியினர் பிரிவினரில் 52 சதவீதம் பேர் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்டியல் இனத்தவர்களில் 30 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரில் 20 சதவீதம் பேரும் இஸ்லாமியர்களில் 22 சதவீதத்தினரும் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 3% உயர் சாதியினர் மட்டுமே மிகவும் வறுமை நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏழ்மை
ஏழ்மை நிலையை பொருத்தவரை பழங்குடியினர் பிரிவினரில் 16% சதவீதம் பேர் உள்ளதாக பாரீஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்டியல் இனத்தவர்களில் 25 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரில் 20 சதவீதம் பேரும் இஸ்லாமியர்களில் 20 சதவீதத்தினரும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இதிலும் 5% உயர் சாதியினர்கள் மட்டுமே ஏழ்மை நிலையில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பணக்காரர்கள்
பணக்காரர்களின் விகிதத்தின்படி பழங்குடியினர் பிரிவினரில் 6% சதவீதம் பேர் உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. பட்டியல் இனத்தவர்களில் 22 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரில் 19 சதவீதம் பேரும், இஸ்லாமியர்களில் 20 சதவீதத்தினரும் பணக்காரர்களாக உள்ளனர். உயர் சாதியினர்களை பொருத்தவரை இதில் அதிகபட்சமாக 28% பேர் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

செல்வந்தர்கள்
செல்வந்தர்கள் பட்டியலில் பழங்குடியினர் பிரிவினரில் 4% சதவீதம் பேர் உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. பட்டியல் இனத்தவர்களில்
9 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரில் 19 சதவீதம் பேரும், இஸ்லாமியர்களில் 18 சதவீதத்தினரும் செல்வந்தர்களாக உள்ளனர். இதிலும் உயர் சாதியினர்களில் அதிகபட்சமாக 49% பேர் செல்வந்தர்களாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உயர்சாதி இடஒதுக்கீடு
பட்டினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்களுக்கு சமூக அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் முன்னேறி சமூகத்தின் என்று அழைக்கப்படும் உயர்சாதியினரில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications