வங்கிக்கொள்ளை.. பிரேசிலில் பெரிய கேங்க்ஸ்டர் கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.. 25 பேர் என்கவுண்டர்!
பிரேசிலியா: பிரேசிலில் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று போலீசார் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய ஆபரேஷனில் 25 பேர் அங்கு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலில் இருக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலைகார கும்பல்களை போலீசார் மாடர்ன் டே கும்பல் என்று அழைப்பது வழக்கம். அதாவது பல்வேறு கேங்க்ஸ்டர் கும்பல்களை குறிப்பிட போலீசார் இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு.
கடந்த 20 வருடங்களாக பிரேசிலில் இந்த மாடர்ன் டே கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மாடர்ன் டே கும்பல்கள் பிரேசிலில் அதிக அளவில் வங்கி கொள்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரேசில்
இந்த நிலையில்தான் பிரேசிலில் மாடர்ன் டே கும்பலை சேர்ந்த பலர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய என்கவுண்டரில் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பார்ம் ஹவுஸ்களில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன்
போலீசார் நடத்திய ஆபரேஷனில் இந்த கும்பல் மொத்தமாக பிடிபட்டது. இவர்கள் பிரேசிலில் இதற்கு முன் பல வங்கி கொள்ளைகளில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முன் 10க்கும் அதிகமான வங்கி கொள்ளைகளில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் புதிய வங்கி கொள்ளை ஒன்றில் ஈடுபட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கொள்ளை
இவர்கள் வங்கி கொள்ளை குறித்து திட்டமிட்டதாக வெளியான உளவு தகவல்களை தொடர்ந்து போலீசார் இந்த ஆபரேஷனை நடத்தியதாகவும், வங்கி கொள்ளை முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பல மோசமான ஆயுதங்கள், துப்பாக்கிகள், சிறிய ரக வெடிகுண்டுகள் இந்த ஆபரேஷனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டை இந்த துப்பாக்கி சூடு சம்பவம் உலுக்கி உள்ளது.

எதிர்ப்பு
அதே சமயம் 25 பேரை ஒரே நேரத்தில் என்கவுண்டர் செய்ததற்கு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தவறானது. இப்படி செய்திருக்க கூடாது. சுடப்பட்ட 25 பேரும் குற்றவாளிகள் என்று முடிவு எடுத்தது எப்படி, இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications