For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட் டச் எது.. பேட் டச் எது.. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் "எந்திரன்"!

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சமூக திறன்களை கற்றுக் கொடுக்கும் ரோபோவை பிரிட்டன் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லண்டன்: ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சமூக திறன்களை கற்றுக் கொடுப்பதற்கான ரோபோவை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆட்டிசம் எனப்படும் செயல்திறன் குறைபாட்டால் உலகளவில் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளுக்கு சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்.

இதனால் இதற்கான சிறப்பு பள்ளிகளில் இந்த குழந்தைகளுக்கு அவர்களது பணிகளை அவர்களாகவே செய்து கொள்வதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவிபுரிந்து வருகின்றன.

பாதிப்புகள்

பாதிப்புகள்

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் தன் வயது கொண்ட குழந்தைகளுடன் நட்புணர்வு கொள்வதிலும் சமூகத் திறன்களை வெளிக்காட்டுவதிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பர். பொது இடங்களில் சப்தம் போடுதல், அழுது ஆர்ப்பாட்டம் செய்தல், சொந்த வேலைகளை செய்ய மறுத்தல், மனம்போன போக்கில் செயல்பட வேண்டும் என்ற நினைப்பு, சிலருக்கு சிலவகைத் துணிகள் அணிவதிலோ அல்லது தங்கள் உடல் மேல் உடை உராயும்போதோ சிரமம் ஏற்படும் என்பதால் அதற்கு மறுப்பர் உள்ளிட்ட குறைபாடுகள் அவர்களிடம் இருக்கும்.

பொறுமையாக கையாள வேண்டும்

பொறுமையாக கையாள வேண்டும்

அக்குறைபாடு உடைய குழந்தைகளை பொறுமையாக கையாள வேண்டும். தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டனில் புதிய ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிசம் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 7,00,000 குழந்தைகள்

பிரிட்டனில் 7,00,000 குழந்தைகள்

பிரிட்டனில் ஆட்டிசம் குறைப்பாட்டால் 7 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமூக திறன்களை கற்றுக் கொடுக்க ஹெர்ட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் காஸ்பர் என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளோடு குழந்தைகளாக

குழந்தைகளோடு குழந்தைகளாக

இந்த ரோபோவானது குழந்தைகளோடு குழந்தைகளாக ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உலா வருகிறது. குழந்தை போல் உள்ளதால் இதனிடமிருந்து சிறு சிறு திறன்களை குழந்தைகள் கற்றுக் கொள்ன்றனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோவுக்கு பாடுதல், ஆடுதல், தலை சீவுதல் உள்ளிட்டவை தெரியும்.

வரப்பிரசாதம்

இந்த ரோபோவை பயன்படுத்தும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உண்ணக் கற்றுக் கொடுத்தல், ஹேண்ட் ஷேக்கனிங் செய்ய கற்றுக் கொடுத்தல், சிரிக்க, பேசுவதற்கும் விளையாடவும் கற்றுக் கொடுக்கிறது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தை போல் உள்ள ரோபோ கற்றுக் கொடுப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆர்வமாக கற்றுக் கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளின் பாதுகாவலன்

பெண் குழந்தைகளின் பாதுகாவலன்

இந்த காலத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து காத்து கொள்ள குட் டச், பேட் டச் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ரோபோவானது ஆட்டிசம் குறைபாடுடைய பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து கற்றுக் கொடுக்கின்றன. இதனால் இது பெண் குழந்தைகளின் பாதுகாவலனாக உள்ளது.

English summary
Kasper robot helps Autism children to learn social skills. Children learns easily from this child like robot. It was developed by the University of Hertfordshire, also sings song, imitates eating, plays the tambourine and combs his hair during their sessions aimed at helping Finn with his social interaction and communication.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X