என்னங்க இது.. குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்? பின்னணி
ஒட்டவா: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் தற்போது 229,818 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளன. அங்கு 3,027,167 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28,957 பேர் அங்கு இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கனடாவில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் வேக்சின்
அதேபோல் ஓமிக்ரான் பரவலால் சில லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் லாரிகள் ஓட்டும் ஓட்டுனர்கள் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணம் செல்லவும், அமெரிக்க எல்லையை கடக்கவும் இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் போடத ஓட்டுனர்கள் அங்கு லாரிகளை இயக்க முடியாது.

லாரி போராட்டம்
இதுதான் அந்நாட்டு லாரி ஓட்டுனர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அங்கு லாரி ஓட்டுனர்கள் சுதந்திர பேரணி என்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். லாரி ஓட்டுனர்கள் ஒன்று கூடி அங்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பி வருகிறார்கள். 50 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் இதனால் தலைநகர் ஒட்டவாவை நோக்கி சென்றுள்ளது.

கடும் போராட்டம்
நாங்கள் ஏன் வேக்சின் போட வேண்டும்.. வேக்சின் போடுவதும், போடாமல் இருப்பதும் எங்கள் அடிப்படை உரிமை தொடர்பானது. அடிப்படை சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை ஏற்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோவிற்கு இதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை. அவர் உடனடியாக நாட்டில் நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பாதுகாப்பு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கலவரம் வெடிக்கும் அபாயம்
போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அங்கு பெரிய கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகரில் இருந்து வெளியேறி வேறு ஒரு மாகாணத்தில் அவர் தங்கி இருக்கிறார். ஆனால் அவரின் இருப்பிடம் வெளியிடப்படவில்லை.
Recommended Video

கனடா பிரதமர் தலைமறைவு
போராட்டம் காரணமாக கலவரம் ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு கருதி ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகி உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்று அமைச்சர்களுக்கு கூட தெரியாத நிலை உள்ளது. ஆனால் தொடர்ந்து ட்விட்டரில் ஜஸ்டின் ட்ரூடோ போஸ்ட் செய்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இடத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பணிகளை செய்து வருகிறார். அங்கு லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் இன்று பெரிய கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications