For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியாக அழைத்து செல்லப்பட்டார்.. ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ்.. கனடாவில் பகீர்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஓட்டவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 113 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாதி, மதம் , பொருளாதாரம் பார்க்காமல் எல்லோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. உலகம் முழுக்க இதனால் மார்க்கெட் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

    உலகில் பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் இதனால் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பல நாட்டு உயர் அதிகாரிகள், அரசியவாதிகள், எம்பிக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கை குலுக்கினார்.. நெருக்கமாக இருந்தார்.. இப்போது கொரோனா.. டிரம்பை சந்தித்த அதிகாரிக்கு வைரஸ்.. ஷாக்!கை குலுக்கினார்.. நெருக்கமாக இருந்தார்.. இப்போது கொரோனா.. டிரம்பை சந்தித்த அதிகாரிக்கு வைரஸ்.. ஷாக்!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி க்ரிகோயருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது.

    உடனே மாற்றினார்கள்

    உடனே மாற்றினார்கள்

    இதனால் உடனே சோபியை தனியாக வைத்து சோதனை செய்தனர். அதோடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரையின்படி, சோபியை சந்திக்காமல் ஜஸ்டின் ட்ரூடோ தனியாக இருந்தார். சோபியுடன் பேசுவதை ஜஸ்டின் ட்ரூடோ தவிர்த்தார். வீட்டிலேயே தனி வீட்டில் ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். சோபிக்கு காய்ச்சல் அதிகம் ஆகவே நேற்று அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் இன்று காலை அவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

    தனியாக இருக்க வேண்டும்

    தனியாக இருக்க வேண்டும்

    ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் இனி தனியாக இருப்பார். அவருக்கு கொரோனா குணம் ஆகும் வரை தனியாகவே இருப்பார் என்று கூறப்படுகிறது. இவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சோபிக்கு உறுதி செய்யப்பட்டதால் ட்ரூடோ மற்றும் அவரின் குழந்தைகளுக்கும் சோதனை செய்ய வேண்டும்.

    இப்போது வரை இல்லை

    இப்போது வரை இல்லை

    ஆனால் ட்ரூடோவிற்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி எதுவும் இல்லை. பிரதமர் ஒருவரின் மனைவிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் இதுவரை கொரோனாவால் யாரும் பலியாகவில்லை. அங்கு 108 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வைரஸால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு கனடா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Canada PM Justin Trudeau's wife Sophie gets Coronavirus, She will remain in isolation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X