மொத்தமாக மாறிய ரூல்ஸ்.. அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அறிவிப்பு! இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஒட்டாவா: ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் கனடா நாட்டிற்குச் செல்கிறார்கள். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக கனடாவுக்குச் செல்கிறார்கள். இதற்கிடையே கனடா இப்போது வெளிநாட்டினருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையைத் தரும் அமைப்பில் சில ரூல்ஸ்களை மாற்றியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கனடா எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் வெளிநாட்டினருக்கான அனுமதியைத் தந்து வருகிறது. இதில் தான் இப்போது மேஜர் மாற்றம் வந்துள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவு
இந்த எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பு என்றால் என்ன? இது எப்படிச் செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். skilled workersஆக இருக்கும் வெளிநாட்டினர் கனடாவுக்குச் செல்ல இதுவே பிரதான வழியாக இருக்கிறது. 2015 முதல் தொழிலாளர் சந்தை தேவைகளை அடிப்படையாக வைத்து தகுதி அடிப்படையில் இந்த அமைப்பு வெளிநாட்டினர் கனடா வர உதவுகிறது.
எக்ஸ்பிரஸ் நுழைவு முறை என்பது ஐஆர்சிசி எனப்படும் குடிவரவு, அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும். ஸ்கில்ட் தொழிலாளர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை இந்த அமைப்பே பரிசீலனை செய்கிறது. இதில் இப்போது ஃபெடரல் ஸ்கில்ட் தொழிலாளர் திட்டம், கனடா எக்ஸ்பீரியன்ஸ் கிளாஸ் மற்றும் ஃபெடரல் ஸ்கில்ட் வர்த்தக திட்டம் என மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தனி மார்க்
இந்த விண்ணப்பங்கள் இதற்காக இருக்கும் பிரத்தியேகத் தரவரிசை அமைப்பு மூலம் மதிப்பிடப்படும். வயது, கல்வி, மொழி புலமை, பணி அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும். அதிக CRS மார்க் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதுவே இதன் அடிப்படை.
2023ஆம் ஆண்டு முதல், சுகாதாரப் பணியாளர்கள், STEM வல்லுநர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், விவசாயப் பணியாளர்கள் போன்ற குறிப்பிட்ட தொழில்பிரிவினருக்கு கனடாவில் தேவை ஏற்பட்டது. அதை பூர்த்தி செய்ய புள்ளிப் பட்டியல் அதற்கேற்ப மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது இந்தப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட CRS வரம்புகள் குறைவாக இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எளிதாக நிரந்தர உரிமை கிடைக்கும். இந்த அணுகுமுறை கனடாவுக்குத் தகுதி அடிப்படையில் வெளிநாட்டினர் வருவதை உறுதி செய்யும் அதேநேரம், துறை சார்ந்த தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவியுள்ளது.
புதிய பிரிவுகள்
இந்தச் சூழலில் தான் அடுத்தாண்டு முதல் "Leadership & Innovation" என்ற புதிய பிரிவை கனடா சேர்த்துள்ளது. புதுமையையும் ஊக்குவிக்கும் வல்லுநர்களை ஈர்ப்பதற்காக இந்தப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் கீழ் சீனியர் மேனேஜர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நட்பு நாடுகளின் திறமையான ராணுவ பணியாளர்கள் ஆகியோர் கனடாவுக்குச் செல்ல விண்ணப்பிக்கலாம்.
- சீனியர் மேலாளர்கள் குழுக்களை வழிநடத்துபவர்களாகவும், திட்டங்களை மேற்பார்வையிடுபவர்களாகவும், கார்ப்ரேட் வளர்ச்சி சார்ந்து இருக்க வேண்டும்.
- ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதுமை, அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குப் பங்களிப்போராக இருக்க வேண்டும்.
- அடுத்து நட்பு நாடுகளின் திறமையான ராணுவப் பணியாளர்கள்.. கனடாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இவர்களின் நிபுணத்துவம் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
இந்திய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
இந்த மாற்றம் சர்வதேச மாணவர்களுக்கான பட்டப்படிப்பு வேலை அனுமதி (PGWP) தகுதியைப் பாதிக்கலாம். அதாவது கனடாவில் மேற்படிப்பு படித்துவிட்டு அங்கேயே வேலைக்குச் சேர திட்டமிட்டவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.. இந்த எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மார்கெட்டே பொறுத்து மாற்றப்படும். 2024ஆம் ஆண்டு முதல் 119 பிரிவுகள் நீடிக்கின்றன, அதே நேரத்தில் 178 நீக்கப்பட்டுள்ளன.
அதாவது இந்த குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் கனடாவுக்கு எளிதாக செல்லலாம். மற்ற துறைகளில் படிப்போர் அதிக போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications