அப்பா ஆனதை சொல்லவா, மனைவி இறந்ததை சொல்லவா?: கனடா நபரின் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவில் மூளைச் சாவு அடைந்த ராபின் பென்சன் என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த உடன் அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் எடுக்கப்பட்டுவிட்டது.

கனடாவைச் சேர்ந்த டிலன் பென்சன் என்பவரின் மனைவி ராபின். அவர் 22 வாரம் கர்ப்பமாக இருந்தபோது கடந்த டிசம்பர் மாதம் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார்.

இதையடுத்து குழந்தைக்காக அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி உயிருடன் வைக்கப்பட்டார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கரு சற்று வளர்ச்சி அடைந்த பிறகு கடந்த சனிக்கிழமை ராபினுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஐவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ராபின் மரணம்

ராபின் மரணம்

குழந்தையை எடுத்த உடன் ராபினுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உயிர் பிரிந்தது.

டிலன்

டிலன்

தந்தை ஆகப் போகிறேன் என்று சந்தோஷப்படவா, இல்லை குழந்தை பிறந்த உடன் என் மனைவி இறந்துவிடுவாளே என்று துக்கப்படவா என்று டிலன் தனது பிளாக்கில் எழுதியிருந்தார். தற்போது அவரது நிலை இக்கட்டாகத் தான் உள்ளது.

உதவி

உதவி

தனியாக குழந்தையை வளர்க்க வேண்டி உள்ளதால் தனக்கு நிதியுதவி செய்யுமாறு டிலன் பொதுமக்களை கேட்டுள்ளார். அவ்வாறு நிதி கிடைத்தால் வேலைக்கு லீவு போட்டுவிட்டு மகனை கவனித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+