For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்!

கனடா நாட்டில் சாலையில் நின்று கத்திய நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் விசாரணையில் தான் கத்தவில்லை பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டொராண்டோ: கனடா நாட்டில் சாலையில் நின்று கத்திய நபர் மீது ''பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தார்'' என வழக்கு பதியப்பட்டு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் போலீஸ் விசாரணையில் தான் கத்தவில்லை பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கனடா நாட்டின் ஓட்டவா என்ற பகுதியை சேர்ந்தவர் 'தவ்ஃபிக் மோயல்லா'. 38 வயது நிரம்பிய இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரில் டொராண்டோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு பிடித்த 90 களில் வந்த பாடல்களை பாடிக்கொண்டு சென்று இருக்கிறார். காருக்குள் மிகவும் சத்தமாக பாடிக் கொண்டு சென்றது வெளியில் இருந்த பலருக்கும் கேட்டு இருக்கிறது.

Canadian man has fined Rs. 7,600 for singing loudly in public

இந்த நிலையில் கனடா போலீசார் அவரது காரை பின் தொடர்ந்து வந்து மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் தவ்ஃபிக் மோயல்லாவிடம் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாக கத்தியதால் உங்களை கைது செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் நான் கத்தவில்லை எனக்கு பிடித்த பாடலைத்தான் பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் நீதிமன்றத்தில் பேசிய போது ''நான் எனக்கு பிடித்த 90களில் வந்த சில பாட்டுக்களை பாடிக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த பாடல் யாருக்கும் எந்த வகையிலும் இடையூறாக இருக்க வாய்ப்பு இல்லை. நான் பொதுவாக ஆடிக்கொண்டே பாடுவது வழக்கம். காரில் இருந்ததால் ஆட முடியவில்லை. நான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை'' என்று கூறினார்.

இவரின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் இவருக்கு அபராதம் விதித்தது. அதன்படி இவருக்கு ''பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தார்'' என்ற சட்டத்தின் படி தண்டனை வழக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் 8000 ரூபாய் அபராதமாக கோர்ட்டிற்கு அடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
A Canadian man called Taoufik Moalla has issued Rs. 7,600 fine for screaming loudly in a public place. But he says that he was merely singing one of his favourite song in his own car.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X