அவ்ளோதான்.. சனி கிரகத்திற்குள் போயே போய் விட்டது காசினி விண்கலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாசா: காசினி விண்கலம் ஒரு வழியாக தனது இறுதிக் கட்டத்தை இன்று எட்டியது. 13 வருட காலத்தின் நிறைவாக, பல மறக்க முடியாத கண்டுபிடிப்புகளை நமக்கு கொடுத்துள்ள காசினி விண்கலம் இன்று சனி கிரகத்திற்குள் போய் விழுந்து விட்டது. இனிமேல் அதற்கும் நமக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடும்.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் காசினி விண்கலம் சனி கிரகத்திற்குள்ளாகப் போய் விட்டது. மிகப் பெரிய வாயு கிரகம் சனி. இந்த கிரகம் குறித்த பல அற்புத, அரிய தகவல்களை நமக்குக் கொடுத்தது காசினிதான்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட தடவை அது சனி கிரகத்தை சுற்றி வந்து விட்டது. பல பெரிய கண்டுபிடிப்புகளையும் அந்த சுற்றுக்களின்போது அது நமக்குக் கொடுத்தது. சனி கிரகத்தில் மிகப் பெரிய மீத்தேன் கடல்கள் இருப்பதையும், சனியின் டைட்டன் நிலவையும் காசினிதான் நமக்குக் கண்டுபிடித்துக் கூறியது.

1997 முதல்

கடந்த 1997ம் ஆண்டு பூமியிலிருந்து கிளம்பியது காசினி. 2004ம் ஆண்டு அது சனி கிரக சுற்றுப் பாதைக்கு வந்தடைந்தது. அன்று முதல் அதன் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் சூடு பிடித்தன.

ஹியூஜன்ஸ் சாதனை

ஹியூஜன்ஸ் சாதனை

2005ம் ஆண்டு டைட்டனைக் கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹியூஜன்ஸ் விண்கலம் டைட்டனில் போய் தரையிறங்கி அசத்தியது. இது புதிய சாதனையாகும். பூமியிலிருந்து புறப்பட்ட ஒன்று வெகு தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குப் போய் தரையிறங்கியது அதுவே முதல் முறையாகும்.

இறுதி முத்தம்

கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டைட்டன் நிலவை ஒருமுறை வெகு நெருக்கமாக எட்டிப் பார்த்து விட்டு வந்தது காசினி. அதன் பிறகு தனது இறுதிப் பயணத்தை அது தொடங்கியது. இன்று நமக்கு குட்பை சொல்லி விட்டு தனது ஆயுளை முடித்துக் கொண்டது.

மறக்க முடியாத காசினி

மறக்க முடியாத காசினி

சனி கிரகத்தின் குணாதிசயம், அதன் நிலவுகள், கடல்கள், அதன் பிரமிக்க வைக்கும் வளையங்கள் குறித்த பல அரிய தகவல்களை கொடுத்த காசினியின் பிரிவு மனிதர்களுக்கு மறக்க முடியாது ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saturn's Cassini probe took its death plunge into the plante today and it has end the 13 year old mission.
Please Wait while comments are loading...