For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய வகை பென்டாகுவார்க் துகள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

ஜெனீவா: ஜெர்மனியில் உள்ள சிஇஆர்என் ஹேட்ரான் கொல்லைடர் ஆய்வகத்தில் புதிய வகை பென்டாகுவார்க் அணுத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு துணை அணுத் துகள் ஆகும். பென்டாகுவார்க் இருப்பதாக கடந்த 60களில் முதல் முறையாக கணிக்கப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அணுத் துகள் போலத்தான். ஹிக்ஸ் போஸான் குறித்த ஆய்வுக்கு முன்பே இந்த பென்டா குவார்க் குறித்து பேசப்பட்டது. ஆனால் பல காலமாகியும் இது இருக்கிறதா என்றே தெரியாமல் இருந்து வந்தது.

Cern experts discover new particle pentaquark

இதுகுறித்து கொலைடர் செய்தித் தொடர்பாளர் கய் வில்கின்சன் கூறுகையில், மற்ற வகை புதிய துகள் போல இது இல்லை. இது சாதாரண புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுக் கலவையாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதுகுறித்து எந்த உருப்படியான தகவலும் நமக்குக் கிடைத்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக இது குறித்து உறுதியான கண்டுபிடிப்பு நடந்துள்ளது என்றார்.

1964ம் ஆண்டுதான் அமெரி்காவைச் சேர்நத இயற்பியலாளர் ஜெல் மான் என்பவர் பேர்யான் என்ற துகள் போன்ற ஒரு துணை அணுத் துகள் இருப்பதாக கூறியிருந்தார். அவர் கூறியது பென்டாகுவார்க் குறித்துத்தான். ஆனால் அதன் பிறகு அதுகுறிததுப எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெல் மானுக்கு அவரது இயற்பியல் பணிக்காக 1969ம ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.

English summary
Scientists at Cern's Large Hadron Collider on Tuesday announced the discovery of a new class of exotic subatomic particles called the pentaquarks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X