For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப்ளிகேஷன்- 15 நிமிடங்களில் ”ரிசல்ட்” ரெடி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் அப்ளிகேஷன் ஒன்றின் மூலமாக லட்சக்கணக்கானோர் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோயான எச்.ஐ.வி மற்றும் சிபில்லிஸ் போன்ற நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் வேளையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவே பல நாட்கள் பிடிக்கிறது.

Cheap Smartphone Dongle Can Test for Disease

இந்த தாமதத்தை தவிர்க்க பதினைந்தே நிமிடங்களில் இந்நோயை கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் ஆப் ஒன்றை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் தயாரித்துள்ள சிறிய வடிவிலான டாங்கிளை, ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டரில் பென் டிரைவ் போல் இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அந்த டாங்கிள் தனக்கு தேவையான மின்சாரத்தை கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனிலிருந்தே எடுத்துக்கொள்ளும்.

எனவே கிராமப்புறங்களில் கூட இந்த புதிய ஆப்பை பயன்படுத்தி நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை கண்டறிந்து அவர்களை விரைவாக காப்பாற்ற முடியும். இந்த டாங்கிள் போன்ற கருவியின் மேற்புறத்தில் கட்டை விரலை வைத்தவுடன், அது தானாகவே கட்டை விரலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொள்ளும். பின்னர் ரத்த மாதிரியை பரிசோதித்து 15 நிமிடங்களில் நோய் இருக்கிறதா என்பதை டாங்கிள் கண்டுபிடித்து தந்துவிடும்.

தற்போது இந்நோய்களை கண்டுபிடிக்கும் கருவியின் விலை ஏறத்தாழ 11 லட்ச ரூபாய் என்றிருக்கும் நிலையில் இந்த புதிய கையடக்க டாங்கிளின் விலையோ வெறும் 2116 ரூபாய் மட்டுமே. இந்த டாங்கிளை எப்படி பயன்படுத்து என்பதை அறிந்து கொள்ள 30 நிமிட பயிற்சியே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A cheap appliance that fits onto a smartphone can successfully test people for the AIDS virus and syphilis, researchers reported Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X