இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு
சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் உள்ளது.
இங்கு அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாலஸ்தீனத்தில் 44.20 லட்சம் வசித்து வருவதாக கூறப்பட்டது. பாலஸ்தீனம் இன்னும் முழுமையாக சுதந்திர நாடாக அறிவிக்கப்படவில்லை.

பாலஸ்தீன பிரச்சனை
இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து பிரிந்ததால் அந்த நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை, ராக்கெட் குண்டுகள் வீசப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பாலஸ்தீனம் தனிநாடாக கூறி கொண்டாலும் கூட அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமெரிக்கா உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளும் கூட பாலஸ்தீனம் விவகாரத்தில் அமைதி காத்து தான் வருகின்றன. ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் கூட பாலஸ்தீனத்துக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

சிலி நாட்டில் அதிக பாலஸ்தீனர்கள்
இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தை தாண்டி வெளிநாடுகளிலும் அந்நாட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் முதல் இடத்தில் சிலி நாடு உள்ளது. இங்கு அதிகளவில் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாட்டுக்கு நடந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக கேப்ரியல் போரிக் தேர்வு செய்யப்பட்டார். இங்கு ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக உள்ள நிலையில் 2022 மார்ச் முதல் கேப்ரியல் போரில் அந்த பதவியில் உள்ளார். இவர் இடதுசாரி சிந்தனை கொண்டவர்.

தூதரகம் தொடங்க திட்டம்
இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ‛‛ சிலி நாட்டில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் வசதிக்காக பாலஸ்தீனத்தில் சில நாட்டுக்கான தூதரகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. '' என கூறியுள்ளார்.

தொடரும் ஆதரவு
பாலஸ்தீனத்துக்கு எப்போதும் சிலி நாடு ஆதரவு தெரிவித்து வருகிறது. சிலி நாட்டின் ரமல்லாவில் கடந்த 1998 ல் பாலஸ்தீனத்துக்கான பிரதிநிதி அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு 2011ல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து யுனெஸ்கோவில் நுழைய ஆதரவு வழங்கியது. தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில் தற்போதைய புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications