"பழிக்குப் பழி.." அமெரிக்கா மீது 34% இறக்குமதி வரியை அறிவித்த சீனா! தொடங்கியது வர்த்தக போர்?
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி உலகின் பல்வேறு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது சர்வதேச அளவில் ஒரு வர்த்தக போரை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இப்போது அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு வரி போடுகிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி வசூலிக்கும் என்பதே இதன் அடிப்படையாகும். கடந்த சில மாதங்களாகவே டிரம்ப் இது குறித்துப் பேசி வந்த நிலையில், புதன்கிழமை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

கையில் சார்ட் ஒன்றுடன் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி என்பதை விவரித்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 10% வரி விதிக்கப் போவதாக அறிவித்த டிரம்ப், வரி செலுத்த விரும்பாத நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்கள் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் எனக் கூறினார்.
டிரம்ப் உலக நாடுகள் மீது 10% முதல் 50% வரை வரிகள் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49% இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 26% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீனா மீது டிரம்ப் 34% வரியை அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகபட்ச பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இது சீன நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்கனவே டிரம்பின் வரிக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில் வரிகளை அறிவித்து வருகிறார்கள். முதல் நாடாகக் கனடா ஏற்கனவே அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியை அறிவித்துவிட்டனர்.
இதற்கிடையே இப்போது சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரிகளை அறிவித்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்போவதாகச் சீனா அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவின் வரி ஏப்ரல் 9ம் தேதி அமலுக்கு வரும் சூழலில், அதற்கு மறுநாள் சீனாவின் இந்த வரி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications